top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Subhashree Seshadri - India

Entry No: 

37

தமிழ் கதை (Tamil Kadhai)

காலை 8 மணி கமலம் காப்பி கோப்பையை கையில் எடுத்து கண்கொண்டு தனது அறையில் வந்து அமர்ந்தாள்.
டிரிங் டிரிங்... அழைப்பு மணி ஒலித்தது
எழுந்து சென்று வாசலில் நின்று கொண்டிருந்தவனை பார்த்ததும்
மனதில் ஒரே சந்தோஷம்.முகத்திலும் அது பிரகாசமாக தெரிந்தது.
வாடா வாடா மாது என்று வாய் நிறைய அழைத்தாள்.
வா வந்து இப்படி உட்கார் பார்த்து எத்தனை நாள் ஆகிறது என்று அங்கலாய்த்துக் கொண்டாள்
அவனும் ஒரு முறை அந்த வீட்டை தன் கண்களால் சுழலவிட்டான்.
ஆமாம் அத்தை நானும் தான் வரவேண்டும் என்று நினைப்பேன்.சந்தரப்பம் சரியாக அமையவில்லை.
இருடா காப்பி கொண்டு வருகிறேன் என்று சொல்லி அடுக்களைக்குள் நுழைந்தாள்
தான் இந்த வீட்டில் சிறுவனாய்
வளைய வந்ததையும் அத்தையின் அன்பில் வளர்ந்ததையும் நினைத்துக் கொண்டான்.
காப்பி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.அவனையே பார்த்து கொண்டிருந்த கமலத்தின்
மனதில் பழைய நினைவுகள் அலைமோதியது
இவளது பக்கத்து வீட்டில் தான் மாது குடும்பத்தினர் இருந்தனர்
மாது எப்பொழுதும் இவர்கள் வீட்டில் தான் இவளது பையனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பான்
சற்று பெரிய நன்றாக ஆனதும் அவர்கள் ஒன்றாக தோட்டத்தில் மாங்காய் பறித்தது , கிரிக்கெட் விளையாடியது, பள்ளி நிகழ்வுகளை பேசிக்கொண்டு என பல நினைவுகள் வந்து நின்றது.
ஒரு நாள் வந்து காலில் விழுந்து என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை என்றான்
என்னடா விசேஷம்
நான் வெளியூர் சென்று படிக்க போகிறேன் என்று சொன்னான்
இப்படியே அவன் உத்யோகம் , கல்யாணம் குடும்பம் என் வருடங்கள் ஓடி விட்டது.
அத்தை! என்ன அப்படியே என்னை பார்த்து கொண்டிருக்கிறீர்கள்
ஆமாண்டா கண்ணா ஏதோ பழைய ஞாபகங்கள்!
அன்று மாலை வரை அவன் அவளுடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கினான்
விடைபெற்று செல்லும் போது ஒரு பரிசு பெட்டி கொடுத்து விட்டு சென்றான்.வழி அனுப்பி விட்டு வந்து பார்த்த கமலத்தின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர்
பெட்டியில் யசோதை கண்ணனுக்கு அமுதூட்டும் விக்ரகம்

"என்னே பாசப் பிணைப்புகள்"



கவிதை
_காதல்
அவளின் முகத்தை கண்டது ஓர் நாள்
கனவில் கண்டு காமுற்றது பல நாள்
நானும் அவளும் சந்தித்தது ஓர்நாள்
பள்ளி பாடங்கள் வீணானது பல நாள்
எங்கள் மனம் ஒருமித்து ஓர் நாள்
பல மனங்களும்ஏற்குமா? எண்ணியது பலநாள்
காதல் கனிந்து திருமணம் நடந்தது ஓர் நாள்
பெற்றோரின் வாழ்த்தும் கிடைத்தது பல நாள்
________




bottom of page