top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Padma Priya - India

Entry No: 

361

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்

காதல் அன்பின் உச்சம்
புரிந்தவருக்கு

ஆனால் காதல் என்ற பெயரால்
பெண்களை சீரழிக்கும் ஆண்களே

உங்களின் எண்ணத்தை நிறைவேற்ற
நீங்கள் உபயோகிக்கும் ஆயுதம் காதல்

புரியா பல மங்கையர்
வீழ்கின்றனர் பாழ்குழியில்..

உண்மையான காதல்
எதையும் எதார்பார்க்காது

ஒரு பெண்ணின் மேல் காதல் வந்தால்
அவளை கடைசிதருணம் வரை கலங்காமல் காப்பாற்று

அதுதான் காதல்........காதல்

காதலியுங்கள் உங்கள் மனைவியை
தாய்வீடு மறந்து,சுற்றம் துறந்து

நீயே உலகம் என அடிவைக்கும்
துணைவியை காதலி ஆயுள்வரை!

நீ காட்டும் காதல் பல மடங்காய்
திரும்பிவரும் உன்னிடத்தில்

காதலிப்பது குற்றமில்லை
முகத்தில் திராவகம் வீசாதவரை
விரும்பாதவளை கொலை செய்யாதவரை

உண்மையாய் காதலி மானுடனே!
உண்மையாய் காதலி!




bottom of page