top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Nandhini Annadurai - India

Entry No: 

72

தமிழ் கதை (Tamil Kadhai)

ஒரு தாய் தன் மகளிடம் எப்பொழுதும் சிடுசிடுவென்றே இருந்தார். மகளுக்கோ தாயின் மீது இனம் புரியாத கோபம். தான் நினைக்கும் எந்த செயலையும் தன் தாய் செய்ய விடுவதில்லை என்ற வெறுப்பு. இவ்வெருப்பும் கோவமும் நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டு இருந்தது. தந்தையும் பெரிதாக இதை கண்டுகொள்ளவில்லை. மகளின் வெறுப்பு அவளை அந்த வீட்டில் இருந்து விலக செய்தது.தாய் தந்தையிடம் அடம் பிடித்து வேறு மாவட்டத்தில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தாள்.அங்கு கிடைத்த புது நட்பு வட்டாரம் அவளை திக்குமுக்காட செய்தது. நாட்கள் நகர்தன. அவள் தன் குடும்பத்தை மறந்தே போனாள். பின்பு கொஞ்சம் கொஞ்சம் ஆக அவளிடம் உள்ள பணம் குறைந்த பிறகு அவளிடம் இருந்த நண்பர்கள் விலகினர். அவள் வெறுமையை உணர ஆரம்பித்தாள். அப்போது அவள் தாய் தன்னை எதற்கு கோவித்தல் என்பதனை உணர்ந்தாள். அது தன் தாய் தன்னிடம் காட்டிய அன்பு என்பதனை உணர்ந்தாள். முரட்டு தனமான அன்பு அது.

bottom of page