top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

MOHAMED KASIM S - India

Entry No: 

130

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்னையின் அன்பினில் உறவுகளை அறிந்தேன்
தந்தையின் அன்பினில் கண்டிப்போடு கலந்த பாசம் உணர்ந்தேன்
ஆசானின் அன்பினில் அகரம் பயின்று
பகுத்தறிவு கண்டேன்
அண்ணனின் அன்பினில் தந்தையின் சாயலை உணர்ந்தேன்
அக்காவின் அன்பினில் எந்தன் நலன் கண்டேன்
தங்கையின் அன்பினில் என்னையும் மறந்தேன்
நண்பனின் அன்பினில் சமத்துவம் கண்டேன்
யாவும் அறிந்த போது உணர்ந்தேன்
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

bottom of page