top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mahalingam Gnanashambanthan - Sri Lanka

Entry No: 

548

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

REKKAI - WINGS

TOPIC - LOVE/AFFECTION
தலைப்பு - அன்பு/காதல் கவிதைப் போட்டி
******************************************
மின்னல் வெட்டும் நேரம் எல்லாம்/
ஏனோ அவளின் நினைவு மலரும்/
கடைக் கண் வெட்டும் பார்வையாலே/
உடலில் எங்கும் மின்னின் அதிர்வு/
விழித்து இருப்பில் கனவில் மிதக்க/
முடியும் ஆயின் காதல் கொள்ளு/
படுத்தும் உறங்கா அவஸ்தை கொடுக்கும்/
உணவைக் கண்டால் வெறுக்க வைக்கும்/
பெற்றோர் உற்றோர் உறவைத் தள்ளும்/
தினமும் நினைப்பில் கனவு கொல்லும்/
அவளின் நிலையோ அறியல் கொள்ளா/
அவஸ்தை இருக்கே எதிரிக்கும் வேண்டா/
அரற்றிப் பிதற்றி வார்த்தை தெறிக்கும்/
ஆரும் கேட்டால் குழப்பம் விளைக்கும்/
நல்ல தங்கம் இவனே என்ற/
நயத்தல் எல்லாம் நொடியில் பறக்கும்/
இறக்கை முளைத்துக் காதல் வானில்/
சிறகை அடிக்க கனவு விரியும்/
கவிதை கிறுக்க ஆசை பிறக்கும்/
மலரின் அழகை ரசிக்கப் பிடிக்கும்/
அவளின் சிரிப்பில் முல்லை மணக்கும்/
அதனை எண்ணிக் காலம் கரையும்/
நினைவில் அவளின் எண்ணம் ஓங்கும்/
இதயம் துடித்து எகிற வைக்கும்/
அழகாய் தெரிய ஆசை பிறக்கும்/
கண்ணாடி பார்த்திட மீசை துடிக்கும்/
அரவம் இன்றி அவளின் அடிகள்/
தொடர்ந்து பதிக்க நேரம் சிறக்கும்/
உணர்வின் முகிழ்ப்பில் காதல் உரைக்க/
பற்பல முயற்சிகள் மனது கொள்ளும்/
கட்டுக்குள் அடங்கா மனதின் ஓசை/
காதல் காதல் காதல் என்றே/
ஓங்கி ஒலித்து ஓசை கொள்ளும்/
தகுதி தராதரம் பார்த்திட அறியா/
ஆசையும் கொண்டிடு பருவம் இதுவே/
இதயத்தைப் பற்றிடும் நாடி நரம்பும்/
காதலின் வேகத்தில் அதிர்ந்திடல் கண்டேன்/
அன்பு என்றுமே இளமையின் வேகம்/
காதல் ஆகிட மருவியும் இங்கே/
மாயம் கொண்டிடு காட்சிகள் எல்லாம்/
மதியை மயக்கிடும் போதையும் ஆகும்/
தக்கதோர் வேளை காத்துக் கிடந்து/
தனது காதலை உணர்த்துதல் நலமே/
சிக்கல் தோன்றும் சிதறலும் தோன்றும்/
நுட்பங்கள் கொண்டு தீர்த்திடல் முறையே/
தக்கது ஒரு காதல் வலையில்/
வீழும் முன்னே ஆய்ந்திடல் பலமே/
உற்ற அன்பாய் உனக்குக் கிடைப்பின்/
மிக்க மகிழ்ச்சி வாழ்ந்திடல் தகையே/
அன்பு கொண்டு இணைந்து வாழ்தல்/
இளமை முதுமை யாவிலும் பலமே/
நல்ல செய்தி நலமாய் உரைத்தேன்/
காதலும் செய்வீர் காத்திரம் கொள்ளும்/
உற்ற கடமை உறவுகள் உண்டு/
உணர்வீர் உங்கள் காலம் வரங்கள்/
கற்ற வித்தை காத்திடல் வேண்டும்/
உற்ற உறவுகள் போற்றிடல் வேண்டும்/
தக்கதொரு தொழில் தேடிடல் வேண்டும்/
தன்முனை உழைப்பில் வாழ்ந்திடல் வேண்டும்/
நல்ல கடமைகள் இளமையில் உண்டு/
நாட்டங்கள் கொண்டிடப் பாடங்கள் உண்டு/
நற்றவம் என்றுமே நன்மை சிறக்கும்/
நல்லதோர் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும்.

ம.ஞானசம்பந்தன்,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

bottom of page