top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Kowsalya S - India

Entry No: 

303

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பலரின் காதல்....

என்னத்த சொல்ல ஏ பொழப்ப,
ஏத்த மொழி கிடைக்கலையே
எடுத்து விளக்க...
குருதியில குடித்தனமிட்டவன்கிட்ட
குத்தகை முடியுதுனு சொல்ல மனசு வரல...
மண்டி போட்டு கேட்டு
மடி ஏந்தி நிக்குறான்..
மனச மறைச்சு வாழ சொல்லி
பெத்தவ ஒருபக்கம் கத்துறா...
வாழ்வோ சாவோ மணாளன்
உன் தஞ்சம் நான்னு சொல்ல,
நெஞ்ச புடிக்கிறா தாயி
கொஞ்சம் கேட்டதுக்கே...
இன்னும் மனச நான் திறந்தா
ஏ கனவு கை சேருமோ என்னமோ
ஏ தாயி மண் சேந்துருவாளோனு
பயத்துலயே பக்கம் மறைச்சு நிக்குறேனே
புது சேலையில கிழியல் போல...
கடல் போல ஆழமாவள் என்றேன்..
மன்னித்துவிடும்..
கரை எனை ஏற்க மறுக்கும் நிலையில்
நான் குமுறினால் சேதம் கரைக்கு மட்டுமா...!
மழைக்கு நிகர் நானென்றேன்..
மன்னித்துவிடும்..
அண்டமே ஆர்ப்பரிக்கையில்
அடுப்பணைக்க மட்டும் நான் சேர்வது சாத்தியமா...!
விட்டு போனா செத்து போவேனடானு
விவரம் சொன்னவளே
விலகி நிக்க
வழி காட்டுறேனே - பாவி நானு,
வலியெல்லாம் மறைச்சு
வீம்புக்கு வெறுப்ப காட்டுறேனே - உன்
வலி உச்சந்தாண்டும்னு அறிஞ்சும்...
ஒத்து வராதுன்னு
உத்து பாத்த அப்பவே
ஒரக்க சொன்ன உன்ன
ஒதுங்கி நில்லுன்னு
ஒட்டி வந்த நானே சொல்ல
ஒரு வார்த்த மட்டும் சிக்குது
ஓரமா நெஞ்சுக்குள்ள....
கட்டிக்கிட்டா ஒன்னு சேரும்
குடும்பம் - ரெண்டு உயிரு
காட்டிபுட்டாலும் ஒன்னு சேரும்னு
கண்மூடித்தனமா இருந்தேனே,
கல்லடி பார்த்த
குருவி போல
காணாமலே போனேனே...
இன்னும் ஒரு வாய்ப்புனு
இறங்கி நீ வாரப்ப
இருக்கமாகி போறேனே
என்ன பெத்தவ பின்னாடியே...
உன்ன நீங்க நெனச்ச
என்ன வெறுத்து போ
விதிக்கு வழி விட்டு...
மீண்டும் காதல் புரிவேனென்றால்
மிச்சமும் உன்னிலே...
மாறு மனம் கொண்டவளே தவிர
வேறு மணத்திற்கு இடமில்லை இங்கே...
கடமைக்காவது உன்னை
கை காட்டுவாகளானு
காத்திருந்து பாக்குறேன்
கண்மூடும் வரையிலும்.....

bottom of page