top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

HARIHARAN KANNAMMAL - India

Entry No: 

122

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தொலைத்ததை தெரியாமல் தேடும் காற்றின் அலையில் கண்டேன் முழு பிறை பொதிந்த அவளின் முகத்தை...
தயக்கத்தோடு தலை நிமிராமல் பேசிய முதல் வார்த்தைகளில்,பந்தயம் கட்டி வேகமாக பாயும் நதியானது என் இதயம்...
காய்த்த மாங்காயும் சிவந்து கனியாகும் அவளின் இனிமை குரலால்...
காமம் மறக்க செய்திடும் அவளின் தாயன்பு...
சொற்-அகராதிகளும் அர்த்தம் தேடும் அவளின் அழகு காதலை வர்ணம் புனைய...
அவளின் அழகுக்கான பட்டம் உலகில் ஏதுமுண்டோ...?
மலரும் மலர்களும் போட்டியிடும் அவளின் கருங்கூந்தல் தொட...
அவளின் காதலை வெளிப்படுத்த மெய்சிலிர்க்கும் மொழிகள்...
என் ஆண்மை வானவில்லும் அவளின் பெண்மைக்காக அமைக்கிறது ஏழு வண்ண பாதயை...
சமுதாய சாடல்களில் சோகம் கொண்ட மேகங்களாகிறது அவளது கண்கள்...
பெண்மை நிழல் தொடாத ஆண்மையும் ஆறுதல் தரும் பெண்மையும் மோதிக்கொள்ளும் கணத்திலும் இதயத்தில் காதல் கனிந்த போதும் நொடிப்பொழுதும் தவறுகள் நடக்கவில்லை... சனக்கூட்டங்களால் விமர்சனங்கள் புத்துயிர் பெற எல்லை மாறாத நம் காதல் பேரழகு தானே சகியே...

- எல்லை தாண்டாத காதல்.


bottom of page