top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Geetha Sree ram - India

Entry No: 

426

தமிழ் கதை (Tamil Kadhai)

நீதானே என் ராசா

நேற்று இரவு ,நான் அப்படிப் பேசியிருக்க்கூடாதுதான்...எழுந்து கொள்ளும் பொழுதே மீனுவிற்கு இதயம் கனத்தது.காலையில் எழுந்ததிலிருந்து... மீனுவிற்கு தலைவலி இருந்துகொண்டே இருந்தது... அலுவலக வேலை அதிகம் காரணமாக இரவில் நீண்ட நேரம் கண் முழித்து கணினியில் வேலை பார்த்ததால் தலைவலி விட்டபாடில்லை. இப்போதெல்லாம் எரிச்சலும் கோபமும் அதிகமாகிக் கொண்டே போகிறது...
குளியலறைக்குள் சென்று இதமான வெந்நீரில் முகத்தை கழுவி உள்ளே நுழைந்தாள்.
அலைபேசி அழைத்தது.. சுந்தரிடம் இருந்து அழைப்பு.. எடுக்கலாமா? வேண்டாமா? ஒரு கணம் தயங்கினாள்..

" நேற்று இரவு" நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது... ஏற்கனவே அலுவலக வேலை பளு காரணமாக அதிக நேரம் உழைத்துக் கொண்டிருந்தாள்... அவருடைய வருங்கால காதல் கணவன். அலைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான். மூன்று முறை கட் செய்தும், மீண்டும் மீண்டும் அழைப்பு... கடைசியாக எடுத்து என்ன என்று கேட்டபோது... சும்மா தான் என்றான் காதலுடன்... கடுப்பாகிப் போய் விட்டாள்... மூன்று வருடம் மூச்சுமுட்ட காதலித்து விட்டாயிற்று..போராடி திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதம் வாங்கி திருமணமும் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க இருக்கிறது. வேலையில் அவள் நல்ல பெயரெடுத்து இருந்தாள்.அதை அப்படியே காப்பாற்றிக் கொண்டால் தான் அவளுக்கு அடுத்த பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிரமத்தோடு தான் வேலை செய்து கொண்டிருந்தாள். இந்த நேரத்தில் இந்த அலைபேசி தேவைதானா? கோபம் கொப்பளிக்க... பெண்கள் என்றால் இளக்காரம் ஆகிவிட்டது உங்களுக்கெல்லாம்... எங்களுக்கும் முக்கியமான வேலைகள் இருப்பது என்பதை மறந்து விட்டீர்களா? என்று படபடவென்று பேசி தொலைபேசியை அணைத்து வைத்து விட்டாள்... அத்தனை பேசியும்.. மீண்டும் அழைக்கிறானே! உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவள்.. என நினைத்தபடி அலைபேசி அழைப்பை ஏற்றாள் . அலோ என்றவுடன்...உன் தாத்தா மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்... அதை சொல்வதற்காகவே உனக்கு.. அழைப்பு விடுத்தேன் ...எடுத்தவுடன் சொன்னால் அதிர்ச்சியாவாய் என்று" சும்மா தான்" என்றேன் நீ தவறாக புரிந்து கொண்டாய்! சீக்கிரம் கிளம்பு... நான் காரை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று அலைபேசியை வைத்து விட்டான்.

தலைசுற்றியது மினுவிற்கு... தாத்தா... தாத்தாவிற்கு உடம்பு சரியில்லையா? அழுகை வர ஆரம்பித்துவிட்டது... எத்தனை அன்பானவர்... காதல் விஷயத்தை கூட முதன் முதலில் அவரிடம் தான் சொன்னாள்... புரிந்து கொண்டு, வீட்டில் பேசி இப்பொழுது திருமணம் வரை .... அவர் இல்லையேல் திருமணத்தில் அத்தனை சுகம் ஏது? இதற்குப் போய் சுந்தரை வேறு கோபித்துக்கொண்டோமே... "நமக்கு கோபம் அதிகமாக தான் வருகிறது" மனதிற்குள் கடித்தபடி, அவசரமாக உடை உடுத்திக்கொள்ள... வெளியில் சத்தம் கேட்டது... அம்மாவும் ,அப்பாவும் மும்பையில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தனர். அவர்களுக்கு பிறகு தகவல் சொல்லிக்கொள்ளலாம்... என்றபடி, வீட்டை பூட்டி விட்டு ஓடி போய் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். என்ன ஆயிற்று எனக் கேட்க ‌... சரியாக தெரியவில்லை ..உடல்நலம்மோசம் என்று... எனக்கு போன் அடித்து சொன்னார்கள்..தாத்தா டைரியில் என் எண் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது... "நான் தான்", நீ என்று நினைத்துக்கொண்டு எனக்கு அடித்து விட்டார்கள். அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் ,கண்களை மூடி அமர்ந்து கொண்டால் மனம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது மனம். மூன்று மணி நேர பயணத்தில் கிராமத்தை அடைந்தனர்...,
ஓடிச்சென்று தாத்தாவை தேட... தாத்தா சிரித்தபடி இருக்கைகளை விரித்தபடி "மீனாட்சி" என்று ஆசையாக அழைத்தார்... ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு பக்கம் சுந்தர் மேல் கோபம் ஏற்பட்டது.
அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே, அதற்குள் தாத்தா... மீனாட்சி மா... வரவர நீ எதுக்கெடுத்தாலும் கோபப்படுகிறாய்... முன் மாதிரி இல்லை என சுந்தர் எனக்கு அலைபேசியில் சொன்னான்.தான் அவரை இப்படி சொல்லி உன்னை அழைத்து வரச் சொன்னேன்...
வேலை முக்கியம் தான் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அதைவிட நம்முடைய மன ,உடல் நலமும் ,அன்றாட மகிழ்ச்சியும் முக்கியம் மகளே... திருமணம் நடக்க இருக்கிறது மூன்று வருட... தவிப்பு நிறைவேறும் நாள்... அதை கொண்டாட வேண்டாமா நீங்கள்? அதிக நேரம் வேலை செய்து... பெயர் எடுப்பது என்பது, தவறான புரிதல். நாளை இது தொடர்ந்து கொண்டே போகும்....அளவாக, சரியான நேரத்தில் வேலை செய்து ,மற்றவற்றையும் அனுபவிக்க வேண்டும் மகளே! அதற்கு தான் உன்னை அழைத்தேன் என்றார். பெரிய உண்மையை எவ்வளவு எளிதாக சொல்லி விட்டார் "தாத்தா அதுதான் தாத்தா" என்றபடி, சுந்தரை பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள்.
உனக்காக பாவாடை தாவணியும், சுந்தருக்கு வேட்டி சட்டையும் வாங்கி வைத்திருக்கிறேன் மகிழ்ச்சியாக கிராமத்து வாழ்க்கையை இரண்டு தினங்கள் ... அனுபவித்துவிட்டு வேலையை தொடங்கம்மா! என்ற படி தாத்தா உள்ளே சென்றார். அழகான பாவாடை தாவணியும், கம்பீரமான வேட்டி சட்டையும் அணிந்து கொண்டு கிராமத்து பெண்ணாகவே மாறி " சுந்தரேசன், மீனாட்சியாக " கிராமத்தை வளைய வந்தாள் மீனு என்கிற மீனாட்சி மகிழ்ச்சியாக....


கீதா ஸ்ரீராம்.
அபுதாபி.

bottom of page