top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

G Saravanan - India

Entry No: 

250

தமிழ் கதை (Tamil Kadhai)

குடும்ப தலைவி

கதையின் தொடக்கமாக,
பள்ளியில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றபடுகிறாள் கதை நாயகியின் மகள்,அவள் பெயர் கண்மனி.அவள் தன் வீட்டிற்கு விரைந்து விரைந்து செல்கிறாள்.அவள் தனது அம்மாவிடம் நம்முடைய குடும்ப அட்டையின் நகலை பள்ளியில் சமர்பித்தால் தான் இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியும் என கூறி விட்டார்கள் எனது பள்ளியில் என கூறினாள்..

அவளுடைய தாயாரின் பெயர் அமுதா.அவள் கணவனை இழந்தவள்,அவளுடைய மகள் நம்முடைய குடும்ப அட்டையின் நகலை கொடுக்குமாறு கேட்க,அவள் அத்தகைய சான்று இனிமேல் தான் அரசிடம் நாம் வாங்க வேண்டும் என கூறினாள்.

அந்த சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்கும் வரை தான் பள்ளிக்கு செல்ல இயலாது அம்மா கூறுகிறாள்.
அவள் தாயாரின் முகம் மெலிவடைகிறது.சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடைய மகளுக்கு உணவு கொடுத்து அவள் நீரை பருகிவிட்டு உறங்க செல்கின்றனர்.அவள் தன் மகளுக்கு தாலாட்டு பாடி உறங்க வைத்து விட்டு.உறக்கம் இன்றி சிந்தித்து கொண்டே இருக்கிறாள். குடும்ப அட்டை குடும்ப அட்டையின் என்ற எண்ணம் தொடர்ச்சியாக தென்படுகிறது.

அவளிடம் தன்னுடைய மகள் கேட்ட கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை ஏன் நம்மிடம் குடும்ப அட்டை இல்லை? என்பதற்கு.
குடும்ப அட்டை என்பது அத்தகைய கால கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் (அ) ஒருவருடைய அடையாள அட்டையாக கருதப்படுகிறது.உதாரணமாக,இக்காலத்திய ஆதார் அட்டை போல்,பொதுவாக அது வெறும் உணவு பொருட்கள் வாங்கும் அட்டை மட்டுமின்றி நம் நாட்டின் குடிமகன் என்பதற்கான அடையாளத்திற்கான சான்று அத்தகையது.
அந்த குடும்ப அட்டை எவ்வாறு இருக்கும் என்றால்.அந்த குடும்பத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பின் வழங்கப்படும். முக்கிய குறிப்பாக அந்த குடும்பத் தலைவர் இருக்கவேண்டும்.எனெனில் அந்த காலத்தில் ஆண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.பெண்களுக்காண சமநிலை உரிமை இல்லை. மேலும் அவளே கணவன் அற்றவள் ஆதலால் அவளுக்கு குடும்ப அட்டை அல்லது அடையாள அட்டை தர மறுத்து விட்டனர்.
அப்போது அந்த அட்டையின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லை ஆனால் இப்போது அவள் குழந்தையின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு எப்படியாவது அதனை வாங்க வேண்டும் என எண்ணுகிறார்.
அடுத்த நாள் காலையில் கண்மனி எழுகிறாள் ஆனால் தன்னுடைய அம்மா வீட்டில் இல்லை.அவள் அருகில் இருப்பவரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறாள்,என்னவென்றால் நான் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சொல்கிறேன் என் மகளை பார்த்துக்கொள்ளுங்கள், இதை கேட்டவுடன் கண்மனி சன்று புன்னகித்தால்,தேர்விற்கு தயாராக தொடங்கினாள்.
அமுதவள்ளி கீராமநிர்வாக அலுவலகத்தில் ஐந்து மணிநேரம் காத்திருந்தால் ,அலுவலர்கள் வர தொடங்கினர். அமுதா அவர்களுடைய விண்ணப்பத்தை கொடுத்து கோரிக்கையை விடுத்தாள்.அவர்கள்,அமுதாவிடம் குடும்ப அட்டை வாங்க ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு...நம்முடைய முன்னோர்கள் காலத்தில் கணவனை இறந்த பெண்களுக்கு உடன்கட்டை ஏறும் வழக்கம் மற்றும் முடி எடுத்தல் போன்ற சடங்குகள் இருந்தன, அதே போல் தான் இத்தகு சூழ்நிலையும் உள்ளது,ஆகையால்,உங்களுக்கான குடும்ப அட்டை வழங்க இயலாது. அமுதவள்ளி , இதை வாங்க வேண்டுமென்றால் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா...அதற்கு அவர்கள் முதல்வர் (அ) அமைச்சர்கள் எவரேனும் சிபாரிசு இருந்தால் மட்டுமே இது சாத்தியம், அமுதவள்ளி கவலையுடன் திரும்பினாள்..
இவ்வாறு சட்டம் மட்டுமே உண்டு நீங்கள் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம் அல்லது முதலமைச்சருக்கு கடிதம் மூலம் விடுக்கலாம் இதை தவிர வேறு வழி எதுவுமில்லை . அவள் இதை அவர்களிடம் உரையாடி பயனில்லை என உணர்கிறாள்.
தன் இல்லத்திற்கு திரும்ப செல்கிறாள் அவள் வந்ததும் அவளுடைய மகள் அம்மா வந்துவிட்டிர்களா என்கிறாள் தான் இப்போது வரை தேர்விற்கு படித்து கொண்டுள்ளேன் என கூறுகிறாள். எப்படியாவது வாங்கி வருவிர்கள் என்று கேட்கிறாள்.அவளாள் பதில் கூற இயலவில்லை எப்படியாவது வாங்கியே ஆக வேண்டும் என திர்மானம் செய்து கொண்டு வாங்கி தருகிறேன் நீ உன் தேர்விற்கு தாயாரகு எண்கிறாள்.
அவள் அஞ்சல் மூலமாகவோ அல்லது ஊர் தலைவர் மூலமாகவோ மனு ஏற்பாடு செய்து முயற்சி எடுத்து வந்தாள் ஒன்றும் பயனளிப்பதாக இல்லை. இவ்வாறு அவள் இல்லத்திற்கு அருகில் இருப்பவர்கள் ஊடகம் வழியாக உன் கோரிக்கை விடுக்கலாம் என அறிவுத்துகின்றனர்.அவளும் அதற்காக தன் தேவை பற்றியும் மற்றும் குடும்ப அட்டையின் அவசியத்தை பற்றியும் உணர்த்துகிறார். எனினும் பயனுள்ளதாக அமையவில்லை.
இவ்வாறு ஒரு வாரம் கழிந்தது அவள் அனுப்பிய மனுவிற்கு எந்த பதிலும் வரவில்லை.
அத்தகைய சமயத்தில்தான் தேர்தல் நேரம் வந்தது,முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் கலந்துகொண்டனர், அமுதா எப்படியாவது இந்த சூழ்நிலையை எப்படியாவது உபயோகித்து கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டினாள். ஊரெங்கும் கூட்டம் அலை மோதியது,அமுதா கூட்டத்தின் நடுவே இருந்தால்,அவளின் அந்த குரல் பெரிதாக எழவில்லை..இருப்பினும் ,அவள் விடாது முயற்சித்து கொண்டே இருந்தால் எனினும் பயனளிக்கவில்லை. அவள் மயங்க ஆரம்பித்தால், அப்போது அருகில் இருந்த பெண் ஒருவள் அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பினாள், அந்த பெண் தான் அவளது மகளின் ஆசிரியை,அவள் அமுதாவிடம் உங்கள் பொண்ணு ரொம்ப புத்திசாலி,பெரிய ஆளா வருவாள், பள்ளிக்கு அனுப்ப தேவையான ஆவணத்தை தயார் செய்யுங்கள்..இதை கேட்ட அமுதா ,எப்படியாவது தன் கோரிக்கையை முதல்வரிடம் கூற நினைத்தாள்.

அருகில் இருந்த ஒரு மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்து தீக்குளிக்க முயன்றாள்,அப்போது அருகே இருக்கும் அனைவரும் அவளை தடுக்க முயற்சிக்க, முதல்வர் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள்.முதல்வரிடம் தன் கோரிக்கையை விடுத்தாள்.

சில நாட்களுக்கு பின்,கண்மனியின் தேர்வுநாள் அன்று, குடும்ப அட்டை இன்னும் வராததால் சோகமடைந்தாள்,,,பின் தபால்காரர் கொண்டு வந்தார்,நேற்று வர இயலாமைக்கு மண்ணிப்பு கேட்டுக்கொண்டார்...
இறுதியில் புதியதாக சட்டம் இயற்றப்பட்டு பெண்களும் இனிமேல் சமூகத்தில் ஒரு அங்கம்,
கண்மனி தன் அம்மாவை நினைத்து மகிழ்வுற்றாள்...


“ குடும்ப தலைவி எனும் அமுதவள்ளி ”


நீதி : “பெண் என்பவள் பெண் மட்டுமின்றி,சமூகத்தின் நீதி”

உதாரணமாக : கண்ணகி..

bottom of page