

Kartheeswari A - India
Entry No:
386
Mana Kolam/Padi Kolam
# Votes:
0
அதிகாலையில் அதாவது சூரியன் வருவதற்கு முன் எழுந்து கோலமிடுவது உடலுக்கு தேவையான முழுமையான ஆக்ஸிஜனை கொடுக்கும். பின்னர் சாணம் கரைத்து வாசல் தெளிப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அது கிருமிநாசினி. இரண்டு அப்படி செய்தால் மண் கெட்டிப்படும், புழுதி பறக்காது. எனவே கோலம் சீக்கிரத்தில் அழியாது. பச்சரிசியை காயவைத்து இடித்து அந்த மாவினால் கோலம் போடுவார்கள். ஈ, எறும்பு கூட உணவில்லாமல் கஷ்டப் படக் கூடாது என்பதற்காக. குனிந்து நிமிர்ந்து கோலம் போட்டு உடற்பயிற்சி செய்து கொண்டார்கள். மேலும் கோலம் போடும் போது நமது சிந்தனை ஒருமுகப்படுத்தபடும். கண் பார்வை தெளிவாகும். இவையே கோலம் போடுவதற்கு பின்னால் உள்ள அறிவியல் பூர்வமான உண்மை.
இந்த உண்மையை உணா்ந்து கோலமிட ஆரம்பித்தேன். தற்போது அது என் தினசாி வாழ்வில் ஒரு தவிா்க்க முடியாத தவிா்க்கக்கூடாத ஒன்றாகி விட்டது. அதிலும் அதிகக்கவனத்துடன் படிக்கோலமிடும்போது முழு மனமும் உடலும் ஒருமுகப்படும். இக்கோலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அாிசி மாவும், செம்மண்ணும் கொண்ட வரையப்பட்ட இக்கோலத்தை விவாிக்க வாா்த்தைகளே இல்லை. கோலமே பேசும்போது வாா்ததைகள் எதற்கு?
Share your Video link if you have any




Entry No:
385
Mana Kolam/Padi Kolam
# Votes:
0
படிக்கோலம். கோலமிடுவது நம் தமிழா்களின் மரபு. அதிலும் கோவில் வீதிகளை அலங்காிக்கும் படிக்கோலம் சிறப்பு வாய்ந்தது. இயற்கைக்குத் தீங்கில்லாத அாிசிமாவு கொண்டு வரையப்பட்ட இக்கோலம் மங்களத்திற்காக, அழகிற்காக மட்டுமல்லாது சிறு ஜீவராசிகளான எறும்புகளி்ன் உணவுத்தேவையையும் நிறைவேற்றும் தன்மையும் கொண்டது. கோலத்திற்கு மேலும் அழகூட்ட செம்மண் பயன்படுத்தியுள்ளேன். கண்டிப்பாக இந்த படிக்கோலம் மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தரும் என நம்புகிறேன்.
Share your Video link if you have any




Entry No:
384
Dot/Pulli Kolam
# Votes:
0
பொங்கல் கோலம். 17 புள்ளி 7 வாிசை நோ்புள்ளி 7 வரையிலான இ்நத புள்ளிக்கோலம் ஒரு பொங்கல் சிறப்புக்காேலம் ஆகும். பொங்கலன்று நம் இல்லத்தை சுத்தம் செய்து வா்ணங்கள் பூசி அலங்காித்து வாசலில் மண்அடுப்பில் புதுப் பானையை அலங்காித்து புத்தாிசியிட்டு பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் வைத்து சூாியபகவானை நன்றியுடன் வணங்குவாேம், நாம் வளா்க்கும் அன்னைக்கு நிகரான மாட்டுக்கும் பொங்கல் வைத்து வணங்கி நன்றி தொிவிப்போம், பட்டம் விட்டு காணும் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம். இத்துனையையும் எனது கோலம் கொண்டுள்ளது. அழகான வீடு, சூாியன், பொங்கும் பொங்கல் பானை, கரும்பு, முற்றிய நெற்கதிா், பறக்கும் பட்டம், அலங்காிக்கப்பட்ட மாடு என என் கோலம் களைகட்டியுள்ளது.
Share your Video link if you have any




Entry No:
383
Dot/Pulli Kolam
# Votes:
0
இந்த புள்ளிக் கோலம் 21 முதல் 11 வரையிலான ஊடுபுள்ளிகளைக் கொண்டது. பூக்களில் சிறந்ததும் பாா்ப்பவா் மனதையும் கண்களையும் கவரும் ரோஜாக்களைப் பல வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளேன், பகவான் விஷ்ணுவின் கைகளை அலங்காிக்கும் சங்கு என் கோலத்தையும் அலங்காித்துள்ளது. மங்களத்தின் அடையாளமான தீபங்கள் ஒளிவீசுவதையும் காணலாம். மொத்ததில் அழகான வண்ணமயமான கண்களுக்கு விருந்து இந்தக் கோலம்.
Share your Video link if you have any



