REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Senthil Kumar - India
Entry No:
125
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
பல்லவி:
காதல் கவிதை சொல்லும் நேரம் - நெஞ்சினிலே!!!
காமன் விதைகள் தூவும் ஓரம் - கண்களிலே!!!
தேகம் தீயாய் உருகும்!!!
மோகம் பூவாய் மலரும்!!!
சரணம் 1:
காந்தப் பார்வை வீசும் - உன் விழியினில்!!!
குயிலும் கவிதை பேசும். - என் கனவினில்!!!
நேசத்தில் சுவாசத்தில் அது கலந்து கலந்து சுத்தும்!!!
உன் ஈர உதட்டின் முத்தம் - சுவைத்திட!!!
என் உணர்வு நரம்பை மொத்தம் - தழுவிட!!!
ஆதியும் அந்தமும் அதை வேண்டும் வேண்டும் நித்தம்!!!
காலையும் மாலையும்
கனவினில் கட்டி அணைத்து முத்தம் இட்டு கொன்றவளே!!! (காதல் கவிதை சொல்லும்...)
சரணம் 2:
வெட்கம் சிறகை விரிக்கும் - உன் மனதினில்!!
இன்ப ஊற்றும் எடுக்கும் - என் நினைவினில்!!!
காதலும் காமமும் எனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும்!!!
இரவின் நேர உறக்கம் - உனை வருடிட!!!
காமன் பார்வை தாக்கம் - எனை உரசிட!!!
இன்பமும் துன்பமும் எனை மாறி மாறி அணைக்கும்!!!
நிஜத்திலும் நிழலிலும்
நரம்பினில் ரத்த ஓட்டம் இட்டு உயிரை கொடுத்தவளே!!! (காதல் கவிதை சொல்லும்...)