top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Saranya Devi - India

Entry No: 

159

தமிழ் கதை (Tamil Kadhai)

அன்பின் பரிதவிப்பு


என்னவென்று கேட்க கேட்க
சொல்லாமல் அழுத, வண்ணம் இருந்தாள் மதி.
ராணிக்கு கேட்டும் அலுத்துவிட்டது.
ராணி கூட்டுக்குடும்பத்து மருமகள் ஏனோ இது பெயரளவில் மட்டுமே,
சம்பளம் இல்லாத வேலைக்காரி அவள்,
மதி ஒன்றாம் வகுப்பு படிக்கும், மாணவி
வந்த கோபத்திற்கு மதியை அடித்தே விட்டாள். இப்ப என்னவென்று கூற போகிறாயா இல்லையா
அம்மா, அக்காவிற்கு எல்லாம், தீபாவளி துணி எடுத்துருக்காங்க அம்மா,
நான் பெரிம்மா கிட்ட கேட்டதுக்கு
உனக்கு வேணும்னா உங்க அப்பா கிட்ட கேளு அப்படியென்று சொல்லிடாங்க, அம்மா
என்று கண்ணீர் மல்க அழுது கொண்டு இருந்தாள்.
ஆம் ராணியின் நிலைமை, அவ்வீட்டில்
அவளுக்கும்,
அவள் மகளுக்கும்,
ராணியின் கணவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதால், மதியின் பெரியப்பா
அவர் மகள்களுக்கு மட்டும் ஆடை எடுத்ததை காண்பித்து அழுதுகொண்டு இருந்தாள்.
ராணி எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை.
அழுகையின் உச்சத்தில் களைத்து உறங்கியும் போனாள்.
அப்படி,இப்படியென்று
தீபாவளியின் முந்தைய தினம் வந்தது.
நாம் ஆவது வாங்கி கொடுக்கலாம். என்று நினைத்து கடைக்கு கூட்டிச் செல்ல வேண்டவே வேண்டாமென்று மறுத்து அப்பா வந்தால் மட்டுமே புத்தாடை எடுத்துக் கொள்வேன். என ஆர்ப்பாட்டம் செய்தாள்.
ராணியும் வேறு வழியின்றி வீட்டிற்கு வந்தாள்.
வரும் வழியில் ஏதோ ஒரு பேருந்து செல்ல
அம்மாவை அழைத்து அப்பா அந்த பேருந்தில் போறாங்க அம்மா
வாங்க அம்மா செல்வோம் என்று
ஆர்ப்பாட்டம் செய்தாள். ஒரு வழியாக
சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றும். அழுகை ஓயவில்லை,
உறங்கியும் போனாள்
கதவு தட்டும் ஓசையில் எழுந்தவள். அப்பா வந்துட்டாங்க மதி
என்ற ராணியில் பலத்த குரலில் ஓடிச்சென்று அப்பாவை கட்டி அணைத்து கொண்டாள்.
ப்ப்பா என்ற வார்த்தையில் இருந்த வலி அப்பாவிற்கும் மகளுக்குமான, உச்சமான அன்பு!
அப்பாவின் பையை ஆராய்ந்தாள்!
மூன்று பட்டுப்பாவடை இருப்பதை கண்டு வியந்தாள்.
பெரியம்மா சொன்னதை எண்ணி
அக்காக்கு எல்லாம் துணி வாங்கி கொடுக்காதீங்க அப்பா என்றாள்.
அவர் செய்ததையே நீயும் செய்தால், அவருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் மதி,
நமக்கு தீமை செய்தாலும் நன்மை! செய்யணும் மதி என்ற கூற்றில் நாயகனாகிப் போனார்! அப்பா
வருடங்களும் ஓடியது
அந்த நிகழ்வு மதியின் மனதில் மறையா ஒன்று
அப்பொழுதில் இருந்து அம்மா, அப்பாவை தவிர
அது வேண்டும், இது வேண்டுமென அவள் வேறு யாரிடமும் கேட்பதில்லை.
ஆறு வயதில் வலியோடு புன்னகையில் கற்றுக் கொண்ட அனுபவம் மதி வாழ்வில் ஆழமாக பதிந்து அப்பா கூறியதை " உனக்கு தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்" வாழ்வின் உயரிய கொள்கையாக கொண்டு வாழ்ந்தாள்.
சரண்யா தேவி குமரவேல்
விருதுநகர்

bottom of page