REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

ரேணுகா ஸ்டாலின் - India

Entry No: 

263

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

#புத்தகம்_எனும்_ஆயுதம்

மனிதனுள் மறைந்திருக்கும்
மனிதத்தை தட்டியெழுப்பும்
தனியொருவன் புத்தகம் . . !

விஞ்ஞான வளர்ச்சியையும்
மெய்ஞான புரிதலையும்
அழகாக எடுத்துரைக்கும்
அன்பாளன் புத்தகம் . . !

காதலின் மகத்துவத்தை
வெற்றுக் காகிதத்தில்
அச்சிலேற்றி இரவு பகல்
பாராது நம் அரவணைப்பில்
அகலாதிருக்கும்
வசியக்காரன் புத்தகம் . . !

பண்டைய கலாச்சாரம் போற்றி
பண்பாடு வளர்த்து பாசம் மாறா
பண்போடு வாழ பாடம் சொல்லும்
பண்பாளன் புத்தகம் . . !

அகிம்சாவாதி காந்தியையும்
புரட்சியாளன் நேதாஜியையும்
அறிந்து கொள்ள அரிச்சுவடியாகி
நம்முன் நிற்பவன் புத்தகம் . . !

மனிதன் கண்டுபிடிப்புகளில்
மைல் கல்லாய் வந்து
மகத்துவம் கண்டமாயவன் புத்தகம் . . !

குழந்தைகள் முதல்பெரியவர் வரை
அனைவர் பார்வையிலும்
பாரபட்சமின்றி நிறைந்திருந்து
நன்மை புரியும் நல்நண்பன் புத்தகம் . . !

என் விழியீர்ப்பில் விலகாமலிருந்து
விரல் தீண்டலில் சுகம் காணக்
காத்திருக்கும் என்னுயிர்க்
காதலன் புத்தகம் . . !

வாசிப்பின் உன்னதம்
உணர்ந்து வாசிப்பை நேசிப்பவன்
வாழ்வில் தோற்பதில்லை . . !

*ரேணுகா ஸ்டாலின்*