REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Yogesh B - India

Entry No: 

137

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் கவிதை
அட‌ டா நான் வானத்தில் பறக்கிறேன்
அழகான வானவில் நீ இருந்தால்

கொட்டு அருவி போல் கவிதை வழியுமே
பெண்ணே‌ நீயும் கண் அசைத்தால்

கால நேரங்களை நானும் மறக்கிறேன்
உந்தன் கைகளை நான் பிடித்தால்

உயிர் ஒன்று இருந்தும் சவமேன
வாழ்கிறேன்
ஒரு நொடி ‌நீ என்னை புறக்கணித்தால்

பயணங்கள் தொடரவே நானும்
விரும்பினேன்
உன் பாத சுவடுகள் எனை பின் தொடர்ந்தால்

வாழ்வின் வேதனைகள் நான் பொறுப்பேன்
சாய்ந்திட உன் தோள்கள் நீ
கொடுத்தால்

ஏமாற்றங்கள் எல்லாம் ஒரு
மாற்றம் கானுமே
என் மனதின்‌ பின்பமாய் நம் காதல் இருந்தால்

என் ஜீவன் போயினும் உன் நினைவு இருக்குமே
இம் மண்ணில் என்னுயிர் மரணித்தால்