REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Vinodhini G - India
Entry No:
328
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்னையின் அன்பில்
நான் கவிதை எழுதவில்லை
கடிதம் எழுதவில்லை;
திரைக்கதை எழுதவில்லை
காவியக்கதை எழுதவில்லை;
வசனம் எழுதவில்லை
வாசகம் எழுதவில்லை;
இலக்கணமும் எழுதவில்லை
இலக்கியமும் எழுதவில்லை;
நான் எழுதியதெல்லாம்
புதிதாய் கண்ட பூமியில்
புதுமை சேர்த்தவள்,
அவளே என் தாய்!
கன்னத்தில் சொட்டியது
முத்தத்தின் தூரல்
சொர்க்க உலகம்
தேடி வந்ததுபோல்
என் மழலை காலம்!
உன் தாலாட்டிலே நான்
நீராடிய ஆனந்தம்
ராகம் கேட்க
இமைகளை சொக்கினேன்!
பேச்சிலும் உன் சாயல்
மூச்சிலும் உன்னை தேடல்,
கருவறையிலே இரசித்தாய்
உன் கண்மணி என்னை!
வலியில்லா வாழ்க்கை தருபவள்
வலியில் துடித்தாள்
உலகம் என்னை காண!
கறக்கும் பசும்பாலில் இல்லை நஞ்சு
நீ சுரக்கும் பாலில் அமிர்தம் ஒன்றே!
உன் பத்து விரல்கள் கருகியே
சோற்றில் நான் செழிப்படைந்தேன்!
உறவுக்கு பஞ்சமில்லை நீர் ஒன்றே,
உன் நகைச்சுவை எனக்கு
திரைத்துளியாய் கொட்டியது!
மஞ்சள் நூல் காரிகை நீ
அனுமனின் அஞ்சனை நீ
அசைக்காத அன்பவள் நீ
உன் விரல் இடுக்கில் கைக்கோர்த்து
ஐய்யம் இன்றி திறிந்தேன்!
பேதமின்றி வாழும் மங்கை
விதையில் இருந்து மரமாய்
படைத்தாள் என்னை,
நான் தூவும் மலர்கள்
அவளை பிரமிக்க!
வருந்தித்தான் வருத்தத்தை தீர்ப்பாய்
என் கண்ணீரில் ஆனந்தாய்
அவள் வருத்தத்தை துடைத்தேன்!
எங்கும் காணாத சித்திரம் கண்ணே நீ
கண்டதால் நான் மெய்யானேன்!
குளத்தில் வற்றிய நீராய் குறைந்து
சிறிதும் வற்றாத கடலில்
வாழச்செய்தாள் என்னை!
இருபொழுதும் கைத்தாங்கினாள்
பவளம் என்னை ஜொலிக்கும் வரை;
மரணத்தையும் எதிர்ப்பாள்
மரகதத்தை பெற்றெடுக்க;
மாணிக்க நிறமாம் அவளின்
குருதியின் நிறம்
என் உடலை ஊக்குவிக்க;
நீலமேகம் நீண்ட வானில்
வானுலாவும் நீலமாணிக்கம் நீ என்பேனே!
சின்னதொரு வழியில்
சிங்காரமாய் அழைக்கும் அவளின்
மகிமையை மெச்சிக்கவே நான் பிறந்தேன்;
ஜென்மங்கள் நான் பிறந்தாலும்
தாயின் பயனால் வெல்வேன்
மறு ஜென்மம் நீடிக்க.
- க.வினோதினி