top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Vigneshwaran S - India

Entry No: 

411

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


முதல் பார்வை
புரியாத மகிழ்ச்சி
புதிதான உணர்ச்சி

சகி அவளை பார்த்த தினம்
என்னுள் என்னை துளைத்தேன்
அவளினுள் என்னை தேட
வில் கொண்டு மான் வீழ்த்தப்படும்
அந்த மான்
வழி கொண்டு என்னை வீழ்த்தியது

முதல் பார்வையிலயே உறைந்து நின்றேன்
உடல் வெளிவந்த ரத்தம் போல
என்னுள் ஒரு மாற்றம் காரணம்
அது அவள் செய்த சித்தம் போல

இமைகள் இமைக்க மறந்தது
தொண்டை வறண்டு போனது
கைகள் தலை கோதியது
கால்கள் நடுங்க தொடங்கியது
இதய துடிப்பு எல்லை மீறியது

என்னுள் பல கேள்விகள்
என்னை பத்தி தெரியாத எனக்கே
எதிரில் நிர்பவளின் யோசனை
யார் இவள் !!!
விலை உயர்ந்த ஓவியமா
பிரம்மன் தீட்டி வைத்த காவியமா
இல்லை
எனக்காக வானத்தில் உதித்து
பூமிக்கு இறங்கி வந்த
வெண்ணிலா வா...

தனித்து நின்றேன்
தனி ஒருவனாய்...
காற்றில் மிதந்தேன்
வின் வீரனாய்...
அழகாய் தெரிந்தேன்
மன்மதனாய்...
காரணமின்றி சிரித்தேன்
பைத்தியக்காரனாய்...

இறைவனிடம் வரம் ஒன்று நான் வாங்கி
மீண்டும் வருவேன் உன்னை தேடி
என்னுள் நான் கண்ட ஒன்றை
உன்னுள் உன்னை காண செய்ய
பார் வியக்கும் அளவிற்கு
காதல் செய்து உன்னை வெல்ல...

-Vigneshwaran

bottom of page