REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Varsha Saravanan - India
Entry No:
370
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதலின் மொழிகள் 💖💖💖💖
துளையிடும் இரு விழி
தோட்டாக்களும்
துப்பாக்கியாக மாறிய
விசித்திர மொழி காதல்💖💖
மௌன மொழி பேசும்
இதய மொழி காதல்💖💖
கண்களால் களவாடும்
களவு மொழி காதல்💖💖
விழித்திருந்தும்
விழித்திரையில் காணும்
கனவு மொழி காதல் 💖💖
சின்ன சின்ன
சீண்டல்களின் கள்ள
சிரிப்பின் மொழி காதல்💖💖
கார் கூந்தல் கலைந்ததை
எல்லாம் கவியாக்கும்
பித்து மொழி காதல்💖💖
கண்ணசைவால் தகவல்
பரிமாறும் ரகசிய மொழி காதல் 💖💖
பொய் கோபங்கள் ஏற்படுத்தும்
செல்ல மொழி காதல் 💖💖
செல்ல செல்ல
சிணுங்கள்களை கொண்ட
கொஞ்சும் மொழி காதல் 💖💖
தட்டு தடுமாறி தவிக்கும்
அவஸ்தை மொழி காதல் 💖💖
மொழி பெயர்க்க
இயலாத கண்ணச்
சிவப்புறும் நாண
மொழி காதல் 💖💖
நெற்றி முத்தம் தரும்
அன்பின் மொழி காதல் 💖💖
காமம் இல்லா
அணைப்பை தரும்
அரண் மொழி காதல் 💖💖
சின்ன சின்ன
ஊடல்களில் பரிதவிக்கும்
ஏக்கத்தின் மொழி காதல் 💖💖
சிந்தும் கண்ணீரை
தாங்கி பிடிக்கும்
தாய்மை மொழி காதல் 💖💖
தவறி விழும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும்
தோழமை மொழி காதல் 💖💖
குழந்தை தனங்கள்
பொங்கி கூத்தாடும்
மழலை மொழி காதல் 💖💖
ஒருவருள் மற்றொருவர்
தொலைந்து முத்தெடுக்கும்
தேடல் மொழி காதல் 💖💖
அன்பை வெளிப்படுத்தும்
எதிர்பார்ப்பின் மொழி காதல் 💖💖
அன்பிற்கு மட்டுமே
ஆயுள் தண்டனை பெறும்
கைதி மொழி காதல் 💖💖
அழியாத பொக்கிஷங்கள்
கொண்ட நினைவுகளின்
மொழி காதல் 💖💖
கட்டிலறையோடு அல்ல
கல்லறை வரை செல்லும்
உயிர்ப்பு மொழி காதல் 💖💖
காதலின் ஆழம்
தெரியாமல் அதை கரையில்
நின்று ரசிக்கும் ரசனை
மொழி காதல் 💖💖
அதனை கரையில் நின்று
ரசிக்கும் ரசிகையாகிய நான்
காதலை காதலிக்கும் காதலி
வர்ஷா சரவணன்💖💖