top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

V.VIJAYALAKSHMI KALIDASAN KALIDASAN - India

Entry No: 

441

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

செம்மொழியே வாழியவே....

மூத்த மொழியே
மூவா தமிழே
கற்பகத் தருவே
கருகா மரமே...//

கடலிலே மூழ்கிய
கண்டமதிலே எஞ்சிய
சொற்களிலேயே இத்தனை
அழகுடன் மிளிரும்
ஈடில்லா மொழியே...//

அன்று முதல்
இன்று வரை
தலைமுறைகள் பல
கடந்தாலும்
கன்னித் தமிழாய்
மிளிரும் இளந்தமிழே...//

இயலாகி இசையாகி
நாடகமாகி எங்கும்
நிறைந்து எதிலும்
ஆளுமை செய்கிறாய் ...//

வல்லின மெல்லின
இடையினமாக வளைந்து
நெளிந்து வரும் தமிழ் நதியே
உன்னை அள்ளிப்
பருகாத பாவலர் உண்டோ‌...//

சங்கம் முதல் இன்றுவரை
இலக்கியங்களாக
இலக்கணங்களாக
அகமாக புறமாக
ஆத்திச்சூடியாக
எத்தனை வடிவங்களிலே
வலம் வந்திருக்கிறாய் நீ..//

செம்மொழியே
உன் சிறப்பான நடையிலே
சிலையும் உயிர்பெறுமே
கல்லும் கவிபாடுமே//

செந்தமிழே
உன் சிறப்பை
என் கவிக்குள்
கொணர இயலுமா?//

செம்மொழியே
வேரூரின்றிய நாள் முதல்
வீறு கொண்டு நடக்கும்
எந்தமிழே
வாழிய.....வாழியவே//

வே.விஜயலஷ்மி காளிதாசன்
தமிழாசிரியை
கோவை

bottom of page