REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Uma Chandrasekar - India
Entry No:
143
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
என் தந்தை என் தெய்வம்
கண் விழிக்கும் முன்னால் சென்று,
கண் உறங்கிய பின் வந்து,
என் பசுமை நினைவுதோறும்,
நீ அலுவலகத்தில் இருந்தாய்,
உன் முகம் காணவே முடியாமல்,
புலம்பி தீர்த்த நாட்கள் உண்டு,
எனது சுயநிலமான மனதுக்கு தெரியவில்லை,
எனது எதிர்காலத்துக்காக தான் நீ,
உனது நிகழ்காலத்தை செலவு செய்கிராய் என்று,
உழைத்து ஓடாய் தேய்ந்தாய்,
வயிற்றை கட்டி எனக்கு சோறுட்டினாய்,
ஒரு போதும் என்னை கண்டு,
நீ மகிழாத நாட்கள் இல்லை.
நான் உறங்கிய பின் தட்டி கொடுத்தும்,
நான் தவறி விழும்போதெல்லாம் கை கொடுத்தும்,
நான் சோர்வடையும்போதெல்லாம் என்னை தூக்கி கொண்டும்,
நீ சுமைந்த சுமைகள் தான் எத்தனை,
எவ்வளவு தான் கடுமையாக நீ தோன்றினாலும்,
உன்னுள் இருக்கும் அந்த மென்மையான தோற்றம்,
என்னால் கண்டு கொள்ள முடிந்தது,
நான் தோற்றால், நீ அழுவாய்,
நான் சோகம் அடைந்தால், நீ தளர்வாய்,
நான் சிரித்தால், நீ நகைப்பாய்,
என் கூடவே பக்க பலமாய் இருந்து,
என்னை உலகம் மதிக்கும் ஆளாக,
என் தோற்றத்தை செதுக்கி,
என் புகழுக்கும் குணத்துக்கும் பாராட்டுக்குரியவரே,
உன்னை கை கூப்பி வணங்குகிறேன்,
ஒரு நாளாவது உன் போல் நான் வாழ்ந்துவிட்டால்,
அதுவே எனது வாழ்க்கையின் மிக பெரிய வெற்றியாகும்.