top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

udhaya vasagam - India

Entry No: 

310

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தூக்கி, தாலாட்டி, பாலூட்டி
பத்திரமாய் வளா்த்தவளே.

தவளும் வயதில்
உடன் தவழ்ந்து
குழந்தையாய் மாறியவளே.

எட்டு வைத்து நடக்கையில்
விழுந்த போது
துடித்து போனவளே.

ஆச்சி, தாத்தா, பக்கத்து வீட்டு அத்தை
எல்லோரும் அம்மா சொல்லு, அம்மா சொல்லு
என்று அன்பாய் சொல்லுகையில்
அப்பா சொல்லு, அப்பா சொல்லு என்று
அப்பாவிற்கு முதலிடத்தை கொடுத்தவளே.

குடும்பி போட்டு, பவுடா் அடிச்சு,
திருஷ்டி மை இட்டு சிரித்து கொண்டு
பள்ளிக்கு அனுப்பி,
அடுப்பங்கரையில் கண்னை கசக்கியவளே.

பரிட்சையில் தேர்ச்சியடையாத போதும்
அதலாம் அடுத்தமுறை தேர்ச்சியாகிருவான்
கையொப்பத்தப் போடுங்க என்று
அப்பாவை அதட்டியவளே.

செய்த தப்பிற்கு என்னை அடித்து
என்னுடன் அழுதவளே.

அப்பா கேட்க ஏன்டி கோழிய கொழம்பு வைக்காம பொறிச்ச,
இதாங்க அவன் நல்லா
சாப்டுறான் என பிடித்ததை செய்தவளே.

சிறுசிறு தவறு செய்கையில்
களவும் கற்று மற என்று பழமொழி சொல்லி
தமிழை ஊட்டியவளே.

நான்கு மணிநேர துலைவில்
கல்லூாி படிக்கும்
என்னை நினைத்து தவித்தவளே.

ஊர் திரும்புகையில்
தாராளமாய் சமைத்து போட்டு
என் பிள்ளை ஒல்லியா போய்ட்டானு
தோழியிடம் துக்கத்தை கொட்டியவளே.

நோய்ப்பட்டு கிடக்கையில்
என்னைவிட
வேதனை அனுபவித்தவளே.

இன்னும் எத்தனை எத்தனை

உன்னால் தான் உயிர்த்தேன்
மரத்தை போல மெல்ல வளா்ந்தேன்
சமூகத்தில் உயா்ந்தேன்.
பனையை போல எந்த உயரத்திற்கும்
நான் உயா்ந்தாலும்
வேர் நீ தான் அம்மா....

தாயின் அன்பை
சில வரிகளில் சொல்ல வேண்டும் என்றால்,

பிறக்கும் போது அழுதேன்
என்னை பாா்த்து ரசித்தாள்.

வளா்ந்த போது அழுதேன்
என்னை சிரித்து அரவனைத்தாள்.

வளா்ந்த பின்பு அழுதேன்
அவளும் அழுதாள்.

தாய்மையின் தராசு ஒரு போதும்
எடை குறைவதில்லை...

ஒருமுறை இருமுறை பலமுறை
கேட்டாலும் பிள்ளைகளிடம் ஒரே பதில்
என் தாய் சிறந்தவள்.

தாய்களுக்கு தலைவணங்குபவராக இருங்கள்
வேர் இல்லை என்றால்
பூ இல்லை.

நன்றியுடன்,
நா.உதயவாசகம்.

bottom of page