REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Thilagavathy T - India
Entry No:
133
தமிழ் கதை (Tamil Kadhai)
கனவு
சிவா பெரிய அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றான் அங்கு ஏராளமான விளையாட்டு பொருட்கள் இருந்தன எல்லாம் விலை உயர்ந்தவை ஆனால் அவனுக்கு கிரிக்கெட் மட்டை பந்து வாங்க மட்டும் ஆசை அதை மட்டும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தான் வீட்டிற்கு வந்ததும் அவன் மனைவி காபி குடுத்தாள் அதை குடித்து விட்டு தான் வாங்கி வந்த பேட் பால் இரண்டையும் கண்ணீர் மல்க பார்த்தான் நினைவுகள் பின்னோக்கி சென்றது சிவா பெரிய பணக்காரன் ஒன்றுமில்லை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் ஆடை விற்பனை கடையில் வேலை பார்ப்பவன் அவனுக்கு அம்மா மட்டும் அப்பா கிடையாது சிவாவுக்கு அவன் அம்மா பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார் கல்யாணம் முடிந்து சிவாவின் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருந்தது அழகான குடும்பம் அன்பான மனைவி பவானி ஒரு ஆண் குழந்தை புகழேந்தி எல்லாம் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது மகன் புகழேந்திக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் எல்லாம் அவனே முதலில் வந்து ஜெயிப்பான் புகழேந்திக்கு அவன் அப்பா அம்மா பாட்டி என்றால் அவ்வளவு உயிர் அவர்களுக்கும் இவன் என்றால் உயிர் அன்பான பொறுப்பான பையனாக வளர்ந்து வந்தான் அவனுக்கு பதினைந்து வயது நிரம்பியது பலவித ஆசைகளோடு பள்ளியில் கிரிக்கெட் விளையாடி வந்தான் இந்தியஅணிக்காக விளையாடுவதே அவன் கனவு அன்று புகழேந்திக்கு பிறந்த நாள் சிவா அவனுக்கு புது ஆடை கேக் எல்லாம் வாங்கி வந்து அவனை சந்தோஷத்தில் ஆழ்த்தினான் சிவாவுக்கும் பவானிக்கும் உலகமே புகழேந்திதான் இருவரும் பரிசுப் பொருள் கொடுத்து அவனை மகிழ்ச்சியில் திளைக்க செய்தார்கள் புகழேந்தி அன்று மிகவும் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு புறப்பட்டான் அவன் அப்பாவோடு பைக்கில்புறப்பட்டான் அன்றைய தினம் அவன் நண்பர்களுக்கு புதுவித இனிப்புகள் வாங்க கடைத்தெருவில் அப்பாவை இறக்கிவிடச் சொன்னான் இனிப்புகளை வாங்கி விட்டு சாலையை கடக்க வந்த போது ஒரு வயதான கண் பார்வை அற்ற மூதாட்டி சாலையை கடக்க முயன்ற போது ஒரு கார் வேகமாக வந்தது புகழேந்தி மூதாட்டியை காப்பாற்ற வேகமாக ஒடி மூதாட்டியை காப்பாற்றினான் அந்தோ பரிதாபம் அந்த விபத்தில் அந்த கார் இவன் மீது மோதியது அந்த இடத்திலேயே துடிதுடித்து விழுந்தான் அவன் அப்பா தடுத்து நிறுத்துவதற்குள் எல்லாம் நடந்து முடிந்தது அந்த விபத்தில் அவன் இரண்டு கால்களையும் இழந்து விட்டான் அவன்கால்களை மட்டும் இழக்கவில்லை அவன் கனவு ஆசை லட்சியம் எல்லாவற்றையும் இழந்து விட்டான் நொடிப்பொழுதில் எல்லாம் முடிந்து இன்றோடு 2 வருடம் முடிந்து விட்டது மகன் புகழேந்திக்கு சக்கர நாற்காலி வாங்கி குடுத்து அவன் வீட்டிற்குள் வளைய வந்தாலும் அவன் கனவை நனவாக்க முடியவில்லை எல்லாம் காலத்தின் கோலம் அவனை ஊனமுற்றவருக்கான விளையாட்டு பயிற்சிக் கூடத்தில் சேர்த்து தினமும் அவன் விளையாடுவதை பார்த்து அவன் கனவு நனவாக வேண்டும் என்று கண்ணீரோடு இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள் அவனுடைய அப்பாவும் அம்மாவும்.