top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Thangavelu.T.K Kandan - India
Entry No:
258
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தலைப்பு : காவல் தெய்வம்.
வல்லமை தாராயோ
வாழும் மனிதருக்கே
வல்லூராய் வந்திங்கே
வாழ்வை மிரட்டுகின்ற
நுண்ணுயிர்க் கிருமிகளை
நீர்க்கச் செய்திடும்
நுண்ணறிவு நல்கியே
பல்லுயிர் காத்திடுவாய் !
நித்தம் நிகழ்கின்ற
உயிர்ச்சேதம் தடுத்திடுவாய்
மொத்த அழிவினை
மீட்க அருளிடுவாய்
காக்கும் தெய்வமே
கருணைக் கடவுளே
தாக்கும் நோயினைத்
தடுத்து நிறுத்திடுவாய்.
க.தங்கவேலு.
bottom of page