top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Thamildheeran Muthusamy - India

Entry No: 

301

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அகரமும் ஆயுதமும் நீயடி

அகரமின்றி அணுவுமியங்காது
அடியென் அனிச்சம்பூவேயென்
அன்றில் அழகே...,

ஆசைகளின் ஆளுமைக்கு
ஆழிப்பேரலை ஆம்பல்களாய்
ஆயிரங்களிரும் ஆமத்துறுவாக
ஆதாமென் ஆன்மாவும் ஆகக்கூடி....,

இடப்பக்கம் இறைவியுனை இணைத்து
இயல்பாய் இயற்றுங்காதல் இசைக்கு
இறைத்தூதர் இங்கேதற்கு......???

ஈடில்லாவுனது ஈகையன்பை
ஈடிகைகொண்டே
ஈடுகொள்வேனேயன்றி
ஈனதையறியேன்....,

உலகமேயானென உறுதியான
உன் உள்ளமே உசத்தியென்று
உய்யானத்தில் உறைத்துளியாவேன்,

ஊதையாய் ஊடுருவிய ஊழ்த்துணையே
ஊனத்தால் ஊறுவேண்டாம்,
ஊற்றுக்காதலால் ஊழ்கமடைவோமடி
ஊழைக்குருத்தே....,

என் எழுத்தாணிக்குருவியுன்
எதிர்பார்ப்புகள் எங்ஙனமும்
எக்காளம் எதிரொளியுமேயன்றி,

ஏவாள் ஏங்கிடும் ஏக்கங்கள்
ஏந்திக்கொள்ளும் ஏகாக்கிரதை
ஏவலனிருக்க ஏமாற்றங்களேதடி
ஏகாந்தமே ஏகவெளியே....,

ஐயத்திற்கிடமின்றி ஐம்பூதமும்,
ஐங்கணைக்கிழவனுடன்
ஐவாய்மானுன் ஐயமுமகலட்டும்...,

ஒருமுறையென்ன ஒண்மையாய்
ஒளிர்மருப்பில் ஒயாமல் ஒலித்திக்கொள்,
ஒய்யாரியுன்னுடன் ஒளித்துவிளையாடும்
ஒருவனிவனென்று ஒருமித்த ஒளியோனுக்கு....,

ஓகக்கலைஞனை ஓவியனாக்கிய
ஓடையின் ஓரத்து ஓலைப்பூவே,
ஓர்வால் ஓகைகொள்ளடி யான்
ஓராட்டும் ஓடமும்நீயென...,

ஒளவியப்படும் ஒளரப்பிரகங்களினூடே
ஒளருவவிரதியாயுன்னையேற்கும்
ஒளசித்தியத்தான்யானடி

அஃதொருவனல்லாது எனது
பஃறுளிநின்னை நான் வெஃகுதலியல்பே,
ஒஃகுதல் அஃகடி
இஃது என் மரபில்லை….!!!!

bottom of page