REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
T Manikandan - India
Entry No:
516
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
ஒற்றை வரியில் சொல்லமுடியாத கவிதை
ஓராயிரம் வரிகளில் சொன்னாலும் தீராத உணர்வு....
வயதை தாண்டி, வாலிபத்தை தாண்டி, வாழ்க்கையை தாண்டி, மனிதர்களை தாண்டி,
இந்த காதல் இன்னும் உயிர்ப்புடன் வாழ்கிறது.....
பள்ளிகூடத்தில் பருவகாதல்....,
இளமை வயதில்
வாலிப காதல்...,
திருமண வயதில்
தீராத காதல்...,
முதுமை வயதில் முதிர்ந்த காதல்...,
என காதல் ஒவ்வொன்றும் பரிமானங்கள்தான்.....
எல்லா காதல்களும் சேர்வதுமில்லை,
பிரிவதுமில்லை,
ஆனால் வாழ்கிறது....
மறக்க முடியாத முதல் காதலும்,
பிரிக்க முடியாத கடைசி காதலுமே,
மனிதனின் வாழ்க்கை காதல்.....
இப்படியான காதலுக்கும் காதலர்களுக்கும் நடுவில் சில சுவாரசியமான, இரசிக்க வைக்கும் காதலும் உண்டு......
பேருந்து பயணத்தின் கடைசி சீட்டின் காதல்....,
தெருவோர தேநீர் கடையின் திகட்டாத காதல்...,
கொட்டும் மழைத்துளியின் மீது மாறாத காதல்...,
தென்றல் வீசி நடனமாடும் கூந்தல் மீது காதல்....,
பௌர்ணமி இரவில் பட்டொளி வீசும் நிலவின் மீது காதல்.....,
தண்டவாள பாதையில் நடந்து செல்லும் கால்கள் மீது காதல்...
இரவுகளில் நினைத்து பார்த்து சோகப்படும் நம் எதிர்காலத்தின் மீது காதல்.....
கடலின் சோகத்தை அவ்வப்போது கரையில் விட்டுசெல்லும் அலைகளின் மீது காதல்...,
பிரசவ வலியில் துடித்து பிள்ளையை பார்த்ததும் புன்னகைக்கும்
தாய்மை மீது காதல்
பெற்றெடுத்த குழந்தைக்கு கொடுக்கும் முத்தம் மீது காதல்....,
இப்படியான காதல்கள் இன்னமும் அழகுதான்....
எல்லா காலங்களிலும் காதலை இரசிப்போம்
நன்றி.....
தேடல் மணி
திருச்செங்கோடு