REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
swarnalatha natarajan - India
Entry No:
299
தமிழ் கதை (Tamil Kadhai)
தாய் வேறில்லை
வேற வழி இல்ல பேசாம உங்க அம்மாவ ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் போய் சேர்த்து விட வேண்டியதுதான் எத்தனை நாள்தான் இரண்டு பேரும் ஆபீஸ் வேலையும் பார்த்துண்டு உடம்பு சரியில்லாத ஒங்க அம்மாவையும் சேர்த்து கவனிக்கிறது
மனைவி சொன்னதைக் கேட்டு ராகவன் யோசித்தான் . நானும் விசாரிச்சுட்டு தான் இருக்கேன் ஒரு நல்ல முதியோர் இல்லமா கிடைச்சா சேர்த்துவிடலாம்
காட்சி 2
.ஸ்கூட்டரில் ஆபிசுக்கு போகும் வழியில் ஆக்சிடென்ட் ஆகி அடிபட்டு ஆஸ்பத்திரியில் ராகவன் இருக்கிறான் .
'வேற வழி இல்ல ராகவன் உங்க வலது கையை வெட்டி எடுத்துவிட வேண்டியதுதான்' டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான்.
என்ன டாக்டர் ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க கையை வெட்டி எடுக்கறதாவது.
டாக்டர் --இதுக்கு ஏன் இப்படி ஷாக் ஆகறீங்க . இனிமே இந்த கையால உங்களுக்கு எந்த உபயோகமும் இல்லை அதனால யோசிப்பதற்கு இதுல ஒண்ணும் இல்ல.
ராகவன்---அது எப்படி டாக்டர் பிறந்ததிலிருந்து எனக்கு எல்லா வகையிலும் உதவியாய் இருந்த என்னோட வலது கையை இழக்க மனசு எப்படி ஒத்துக்கும்
என்ன ராகவன் பிறந்ததிலிருந்து ஏன் பிறக்கறதுக்கு முன்னாடியி லிருந்தே உங்கள கண் மாறி வைத்து பாதுகாத்த உங்க அம்மாவையே அவங்களால இனி உபயோகமில்லைன்னு தெரிஞ்சதும் ஒதுக்கி வச்ச உங்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே.
பொடேல் என்று மண்டையில் அடித்தது போலிருந்தது ராகவ னுக்கு.
என் கண்ண தொறந்துட்டீங்க டாக்டர். எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் . அதனால்தான் எனக்கு இந்த தண்டனை போலிருக்கறது .உடனே எங்க அம்மாவ வீட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்.
கவலைப்படாதீங்க ராகவன் உங்க கைக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை .கட்டு போட்டு பத்து நாள் ரெஸ்ட்ல இருந்தீங்கன்னா சரி ஆயிடும். நேத்து முதியோர் இல்லத்திற்கு ஒரு பேஷன்ட்ட பார்க்கப் போயிருந்தேன் அங்க உங்க அம்மாவை பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன் என்னை பார்த்த உடனே முகத்தை நான் பார்க்க கூடாதுன்னு வேறுபக்கம் திரும்பி விட்டார்கள்.
தாய் என்பவள் நம் உடம்பில் ஒரு பகுதி போல்தான் அவளை ஒரு பொழுதும் நாம் வேறாகப் பார்க்கக் கூடாது என்றார் அவன் குடும்ப நண்பருமான டாக்டர்.
உண்மைதான் தொப்புள் கொடி வழியே சுவாசம் உணவு அளித்துக் காத்திட்ட தாய் எப்படி வேறாக முடியும் என்றுமே தாய் வேறில்லை தான்.
By N Swarnalatha
Entry No:
300
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
மரமே .... ஓ மரமே... எனது
வெண் சாமரமே மரமே.....
இலைகள் ஆயிரம் உனது ஆடையோ
கலைமிகு அணிகலன் பூத்த மலர்களோ
இதம் தரும் காற்றில் அவை தரும் நறுமண வாடையோ
அணில்கள் விளையாடும் அரங்கம் நீயே
இனிய பழங்களின் சுரங்கம் நீயே
வண்ணத்துப் பூச்சிகளை வரவழைப்பவள் நீயே
எண்ணத்தில் ஆயிரம் இசை எழுப்புபவள் நீயே
இரவின் நிலவில் ஒளிரும் வெள்ளி ரதம் நீயே
இயற்கையின் படைப்பில் மின்னும் அதிசயம் நீயே
வெய்யிலிலும் மழையிலும் குடை பிடிக்கும் தாயே
கல் எய்தினாலும் கனி தரும் கொடை வள்ளல் நீயே
மஞ்சள் பச்சை இலைகள் பனி
துஞ்சும் அழகிய நிலைகள்
கொஞ்சும் வண்ணக் கிளிகள்
தஞ்சம் புகுந்த கிளைகள்
அஞ்சும் காதலர் அமர
மஞ்சம் விரித்த மலர்கள்
மஞ்சும் சூழ மயில்கள் ஆட
நெஞ்சம் குளிர நீ தரும் நிழல்
பஞ்சம் எனக்கில்லை தோழி இப்புவியினில்
எஞ்சும் நாட்களை உன்னுடன் இனிதே கழித்திட
ஏரிகளில் உன் கூட்டம்
பாடும் பறவைகள் சரணாலயம்
மாரியினைத் தந்திடுதே
ஓடும் மேகம் நிறுத்தி உன் உயரம்
காடாக உன் கூட்டம் விலங்குகளின் புகலிடம்
வீடாக ஆகிறாய் இல்லாத மனிதருக்கு நீ வசிப்பிடம்
திருத்தலங்களில் நீ துதிக்கப்படும் தலவிருட்சம்
மருத்துவ குணம் கொண்டு படைக்கின்றாய் மகத்துவம்
முப்பத்து ஆறு கோடி ஆண்டுகள் முன் உன் தோற்றம்
இப்போது வரை இல்லை உன் இயல்பில் ஒரு மாற்றம்
தலை நிமிர்ந்து நிற்கின்றாய் தலைமுறைகள் பல கடந்து
தலைவணங்கி உணர்கின்றேன் மிகச் சிறியவளாய் உனை வியந்து
நான் வெளிவிடும் மூச்சினை உள்வாங்கி
உயிர் வளியாய்த் தருகிறாய் இல்லாது ஏதும் பங்கமே
என் சுவாசப் பையின் விரிவாய் இயங்கும்
நீயும் என் உடலின் ஓர் அங்கமே
கனிவான மரமே உன்னை நான் நேசிக்கிறேன்
காலம் முழுதும் உன் துணையிருக்க இறைவனை யாசிக்கிறேன் .
By N Swarnalatha
Entry No:
532
English Poetry
Wishing you all dear
A wonderful life with no tear
Filled with fun and cheer
Bringing the heavens here
Learn Unconditionally to shower
Love on everyone on earth's sphere
Resolve to lend your ear
What others want you to hear
Keep your mind always clear
Setting aside all your fear
Decide and solemnly swear
To strive for a clean atmosphere
you have in you the fire
Realize it, success will come near
By Swarnalatha N