REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SURESH MURUGESAN - India

Entry No: 

503

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தேநீர்

அனைவருக்கும் மிக
அத்தியாவசிய தேவை
என்பதால் என்னவோ
தே(நீர்) எனப் பெயர் பெற்றாய்....!
பலரின் பசி போக்க
சிலரின் துயர் நீக்க
நீ இனிப்பான மருந்தானாய்
மருத்தென்றால் கசக்கும்
ஏனோ நீ மட்டும் தித்திக்கிறாய்...!
ஆவி பறக்க
குவளையில் உள்ள உன்னை
சுவைக்கும் போது
பறந்த ஆவி போல்
பறந்தோடியது
என் மனக்கவலை...!
குவளையில் உள்ள கடைசி துளியையும்
வீணடிக்க மறுக்கும் என் நாக்கு...!
தேநீர் கலவையில்
உள்ள
தேயிலை தூள்
இனிப்பை விட
கறவை பசுவின்
தூய்மையான பால்
இத்தூய்மையான பால் போல
கலப்படமில்லா அன்பு கொண்ட
எனை ஈன்றெடுத்த
தாயின் அன்பும்
கலந்ததால் என்னவோ
தேநீரின் சுவை
தித்திப்பின் மிகுதியால்
மேலும் சுவையானது...!
தேநீரின் சுவையை
வார்த்தையால் விவரிக்க முடியாமல்
தவிக்கிறேன்....!