top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sukumaran Vasunthara devi - India

Entry No: 

521

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

உனக்கு நான்
எனக்கு நீ.....

மழையின்
கடைசித்துளி முத்தமாக
எனக்கு நீ வேண்டும்!...
குளிர்கால இரவின்
போர்வையாக
உனக்கு நான் வேண்டும்!
வெயிலில்
உன் பாதம் மேல் நான் ஏறி
நடக்க எனக்கு
நீ வேண்டும்!
தூக்கம் இழந்த
நிலையில்,
என் மடி சாய்திட உனக்கு
நான் வேண்டும்!

என் தலை கோதிட
எனக்கு நீ வேண்டும்!
உன்னை முத்தம் மழையில்
நனைக்க
உனக்கு நான் வேண்டும்!
மூன்றாம் மாதத்தில்
சுவைத்திடும் புளியாக
எனக்கு நீ வேண்டும்!
உன்னை குழந்தையாய் கவனிக்க
உனக்கு நான் வேண்டும்!

நிறைமாத வயிறு தள்ளாட
கைபிடித்து நடக்க
எனக்கு நீ வேண்டும்!
கதகதப்பான குளிர்காற்றில்
காற்று நுழைய முடியாத அளவுக்கு உன்னை அணைக்க உனக்கு நான் வேண்டும்.....
தேநீர் சுவையே
உன் உதட்டில் ருசிக்க
எனக்கு நீ வேண்டும்...
என் அணைப்பில் வாழ
உனக்கு நீ வேண்டும்....


கால ழுமுவதும் நாம்
காதலோடு நம் வாழ்க்கை பயணிக்க வேண்டும் ....

- அன்பின் சகி

bottom of page