REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Suji S - India
Entry No:
379
தமிழ் கதை (Tamil Kadhai)
இது ஒரு பெண்ணை பற்றிய கதை.. அந்த பெண்ணிற்கு எதன் மீது அதித அன்புள்ளது ??அந்த பெண் தன் வாழ்வில் அடுத்த இடத்திற்கு செல்லுகிறாள் அதாவது திருமணம். திருமணமாகி சில நாளில் அவள் கணவன் இறந்துவிடுகிறார்.வளர்ந்து வரும் காலங்களில் இதை பெரிதும் நினைப்பதில்லை.ஆனால் நான் எழுதும் கதையில் அப்படி அல்ல.அவள் இருந்த இடத்தில் திருமணமாகி சென்றால் அவ்வளவு தான் அங்கு தான் இருக்க வேண்டும்.அந்த பெண் என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் போது நீ உன் தாய் வீட்டிற்கு திரும்பி போ என்று அவள் மாமி கூறும் போது அதற்கு அவள் சற்றும் நினைக்காமல் நீர் போகும் இடத்தில் நானும் வருவேன்.உம்முடைய ஜனம் இனி என்னுடைய ஜனம் என்று அவள் மாமியிடம் கூறுகிறாள். தன் கணவன் இல்லாத இடத்தை அவள் மகளாக அந்த மாமிக்கும் மறுவாழ்வாக மாறுகிறாள்.அவள் தன் குடும்பத்தை அவ்வளவாய் நேசித்தால்... மறுமகளாக வாழ்ந்த இடத்தில் "மகள்"என்ற நிலையை அடைகிறாள்.ஆண் பெண்ணிற்கு மட்டும் தான் அன்பு,காதல்,நேசம் எல்லாம் இருக்குமா ..? ஒரு பெண் திருமணமாகும் போது அவள் பிறப்பிடத்தை விட்டு எல்லாவற்றையும் கடந்து போகிறாள்.தன் குடும்பத்தை போல அந்த குடும்பத்தையும் அவள் அன்பால் இணைக்கிறாள் .குடும்பத்தை நேசிப்பது கூட ஒரு வகையான ""அன்பு"" தான்!!! நேசித்து தான் பாருங்களேன்!!