REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Suganthi Subramani - India
Entry No:
27
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
நான் அழைக்க மாட்டேனா என காத்திருந்த காலங்களும் உனக்கு உண்டு.,
நீ என்னை அழைக்காமல் இருந்துவிடுவாயா என நான் இறுமாப்பு கொண்ட காலங்களும் எனக்கு உண்டு.,
நான் அழைக்கவே கூடாது என்று நினைத்தாயா!?
அழைக்கவே மாட்டேன் என்று நினைத்தாயா !?
எனக்கு ஏன் இந்த தண்டனை கொடுத்தாய்.,!?
தவறேதும் செய்துவிட்டேனா!?
நீ தண்டிக்கும் அளவிற்கு.,!?
தவிக்கிறேனடா உன் குரல் கேட்க முடியாதா என்று
இதுவரை நான் எடுக்காத முயற்சி இல்லை.,
இறைவனிடம் வேண்டாத நாளும் இல்லை.,
ஒருமுறை உரிமையோடு ஒரு வார்த்தை பேச மாட்டாயா???
உன்னிடம் மன்றாடுவதாலேயே என் மதிப்பு உனக்கு புரியில்லை.,
உண்மைக்கும் உணர்ச்சிக்கும் இடையில் உருக்குழைந்து போகும் என் வாழ்க்கையை எண்ணிப்பார்த்தாயா!?
உரியவன் உதாசீனம் செய்யும் கொடுமையை அனுபவிப்பதைவிட வேறு பெரிய கொடுமை இருக்க முடியுமா நீயோ சொல்...,
உன்னில் மாற்றம் ஏற்பட்டால் மறக்காமல் வா....
மாண்டு போகாமல் இருந்தேன் என்றால் உன் மார்போடு சாய்ந்து மற்றதை கூறுகிறேன்.