top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Subhiksha Kannan - India

Entry No: 

363

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


தலைப்பு: ஆசை


வானத்தில் பறக்கும் பறவை போல் பறக்க ஆசை..!/
மேகத்தில் பொழியும் மழையாகி மகிழ ஆசை..!/
குழந்தையாய் மாறி மழலை பேச ஆசை..!/
மீண்டும் அடுத்த ஜென்மத்தில் அன்னையின் கருவறையில் அமர ஆசை..!/

மீண்டும் பள்ளி செல்ல ஆசை..!/
வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆட ஆசை/
இந்த மண்ணில் செடியாய் முளைக்க ஆசை..!/
கரை புரண்டோடும் கடல் நீரை அள்ளிக்கொள்ள ஆசை..!/

அம்மா மடிமீது சாய்ந்துக்கொள்ள ஆசை..!/
திருவிழா அன்று அப்பா என்னைத் தோள்மீது சுமந்து சாமியை காட்டுவது போல இன்று நடக்குமா என்ற ஆசை..!/
எண்ணற்ற ஆசை என் மனதில் எடுத்துரைக்க ஆசை..!/
ஆசைகள் ஆயிரம் அளவில்லா அகிலத்தில்..!/

க. சுபிக் ஷா
சேலம்.

bottom of page