REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Subhashree Sathiamoorthy - United Kingdom
Entry No:
240
தமிழ் கதை (Tamil Kadhai)
றெக்கைவிரித்தான்
நான் முன்னா காரைக்குடியைச் சேர்த்தவன்
12 ம் வகுப்பு படிக்கிறேன். என் வீடு பள்ளியிலிருந்து சற்று தொலைவில்
இருப்பதால் தினமும் பேருந்தில் செல்கிறேன் வெகு நாளாய் காத்திருந்து அன்று தான்
அவளை பார்த்தேன். கூட்டத்திலேஇருந்தாலும் எனக்கு மட்டும் தனியே தெரிந்தாள்
ராணியம்மா ஆம் பெயர் தெரியாது தெரியவும் வேண்டாம் அவள் தான் என்
ராணி அருகில் சென்றேன். அழகை மட்டுமில்ல குணத்தையும்
கண்டேன் தோழிகளுடனான உரையாடலில்.பேச முற்பட்டேன் அவள் சூடியிருந்த
மல்லி பூவை பார்த்த பொழுதில் ஒரே எண்ணம் தீர்க்கமானமுடிவு இவள் தான்
என் ராணி என்று வாயடைத்து நின்றேன் .மறுநாள் எப்படியுமனதிலிருப்பதை
சொல்லிட எண்ணினேன் ஆனால் நடந்தது என்னவோ அவள்
அருகில் வர குளிரிலும் வியர்த்தேன் என் முழுவிவரத்தையும் கேட்டு நாம்
ஏன் நண்பர்களாக கூடாது என என் எண்ணத்தை கேட்டாள்
மீண்டும் நா தழுவ மௌனமாய் சரியென்றேன். இருவரிடமும் நல்லுறவு நீண்டது.
ஆனால், சிறு தயக்கம் அவளிடம் தென்பட்டது. நானும் கவனமாயிருந்தேன் .
நாட்கள் உருண்டன இருவரும் நல்ல நண்பர்களானோம் தோழிகள் அனைவரையும்
அறிமுகப்படுத்தினாள். நான் என் பெற்றோரை அறிமுகப்படுத்த வேண்டும்
என்பதிலேயே ஆசையாயிருந்தேன்.ஆனால் அவையெல்லாம்
நாளை நான் கொடுக்கவிருக்கும் கடிதத்திற்கு பின் என்றே உறுதியாய் இருந்தேன்
நாளை என்ன நடக்கும் கடிதத்தை ஏற்பாளா தோழியாய் இதற்க்கு சம்மதிப்பாளா
இன்று அவள் வழக்கமான உற்சாகத்துடன் தென்பட்டாள் . நான் சற்று
கவலையுடன் இருந்தேன். சிறிது உரையாடலுக்கு பின் கடிதத்தை நீட்டினேன்
எரிமலை போல வெடித்தாள்.வழக்கமான ஒரு ஆண் தோழனை போல
நீயும்நடந்து கொண்டாய் என்றாள், இல்லை நான் உன் தோழனில்லை
நீதான் என்னை அப்படி நினைத்தாய் மீண்டும் வார்த்தைகளால் சுட்டெரிக்க
எத்தனித்தபோது நிறுத்து முதலில் கடிதத்தை படி பின்பு உன் பதிலை
பொறுமையாய் கூறு என்றேன்.மறுத்தால் என் உறவை வெறுத்து ஒதுக்கியது போல
உணர்ந்தேன்.பல போராட்டத்திற்கு பிறகு என் கடிதத்தை ஏற்றாள்.
கடிதம் கொடுத்த தருணம் என் தேவதை வீட்டிற்கு வரும்
தருணம் வெகுஅருகில் இல்லை.றெக்கை கட்டி பறப்பது போல இருந்தது. இனி
வேறெதுவும் தேவையில்லை சம்மதம் போதும் என ஏகப்பட்ட கற்பனைகள்
நொடிப்பொழுதில் ஓடி மறைந்தது கடிதத்தை படித்தால் 'அண்ணா அண்ணா’என
அழுதாள் .நான் தவறாக நினைத்துவிட்டேன் பெண்கள் நெருங்கிபழகினால் உடனே
ஆண்கள் காதல் என்று அர்த்தம் கொள்வார்கள் என்றுதான் நினைத்தேன்
இதுவரையில், ஆனால் ஆண்கள் சகஜமாய் பழகினால் காதல் என்று பெண்களும்
அர்த்தம்கொள்வார்கள் என்று புரிந்துகொண்டேன் . இரண்டும் தவறு .அன்பு
எல்லைகடந்தது பாசம் கொண்டுவந்தது இருவேறு மனங்களின் பரிமாறுதல்
காதலில்மட்டுமல்ல அன்பு கலந்த அண்ணன், தங்கை உறவுகளில் கூட மலரும்.
கடிதம்
ராணியம்மா என் மன சிம்மாசனத்தில் நீ என்றுமே ராணி ஆம்
என் தங்கை ராணியம்மா உன்னை முதன்முதலில் பேருந்து நிலையத்தில் வெகு
தொலைவில் தான் பார்த்தேன் . என் தங்கையை போலவேயிருந்தது .
பல வருடங்களுக்கு முன் இயற்கையின் கோரப்பசியான சுனாமிக்கு என் தங்கையும்
இரையானாள் . அவளை இனி எங்கு காண்போம் , பேச்சை எப்படி
கேட்போம் என பல வருட கனவை நீதான் நீக்கினாய். என் தங்கையே
மீண்டும் கிடைத்ததாய் உணர்ந்தேன் .என்னை உன் அண்ணனாய் ஏற்று அண்ணா
என அழைப்பாயா. இன்றைய பிறந்தநாள் பரிசாய்கேட்கிறேன்.
அவளின் மறு உருவாய் உள்ள இந்த ராணியம்மா விடம்
இப்படிக்கு
றெக்கைவிரித்தான்
(அன்பாய்அரவணைக்க)
சுவாதி
Entry No:
65
தமிழ் கதை (Tamil Kadhai)
றெக்கை விரித்தான்
வண்ணக்கம் ! என் பெயர் முன்னா . நான் காரைக்குடி மாவட்டத்தைச் சேர்த்தவன் .
நான் 12 ம் வகுப்பு படிக்கிறேன் . என் வீடு பள்ளியிலிருந்து சற்று தொலைவில்
இருப்பதால் தினமும் பேருந்தில் செல்கிறேன் .
வெகு நாட்களாய் காத்திருந்து அன்று தான் அவளை பார்த்தேன் . கூட்டத்திலே நின்று
இருந்தாலும் என் கண்களுக்கு மட்டும் தனியே தெரிந்தால் . என் ''ராணியம்மா '' !!!
ஆமாம் , அவள் பெயர் தெரியாது , ஆனால் தெரியவும் வேண்டாம் அவள் என் ''ராணி ''
தான் அவளை நான் தினமும் சிம்மாசனத்தில் வைத்து அழகுபார்ப்பேன் .
கருநீல வானில் வெளிர்மேகம் (சீருடை ) நடுவே நிலாவை போன்ற முகம் சூரிய
ஒளியிலும் தனியே மிளிர்வாள் என் ''ராணி '' !!! . அருகில் மெல்ல சென்றேன் பேச
முற்பட்டேன் . அழகு மட்டுமில்ல குணத்தையும் புரிந்து கொண்டேன் அவள்
தோழிகளுடனான உரையாடலில் .
திடீரென்று , ஒரு எண்ணம் மனதில் தைரியத்தை வளர்த்துகொண்டு பேசி விடலாம்
என எண்ணி , விரைந்தேன் .நிமிர்ந்து பார்த்தேன் , பேச முற்பட்டேன் அவள் சூடியி
-ருந்த மல்லிகை பூ வை பார்த்தேன் ., பார்த்த பொழுதில் , ஒரே எண்ணம் தீர்க்கமான
முடிவு இவள் தான் என் '' ராணியம்மா '' தான் .
என் ''மகாராணி'' தான் .... என்று பேச முடியாமல் நாதழுவ வாயடைத்து நின்றேன் .
நியாயிரு விடுமுறை .
மறுநாள் திங்கள் கிழமை மீண்டும் , விரைந்தேன் பேருந்து நிலையத்திற்கு , இம்முறை
எப்படியும் பேசி விட வேண்டும் !., மனதில் இருப்பதை சொல்லி விட வேண்டும் என்று
ஆதங்கம். ஆனால் , மாறாக நடந்தது என்னவோ??? அவள் பேசினால் !!!! ஆம் !!!
என்னை நோக்கி நடந்தாள் .குளிர்காலத்திலும் வியர்வையை உணர்ந்தேன் . ஏதோ
தவறாக நினைத்துவிட்டாலோ !!, ஏதேனும் தொந்தரவாக நினைத்துவிட்டாலோ , என
பலகோடி எண்ணம் நொடி பொழுதில் தோன்றி மறைந்தது அருகில் வந்தாள் .
என் முழுவிவரத்தையும் கேட்டு அறிந்தால் , நாம் ஏன் நண்பராக இருக்கக்கூடாது ??!!!
என என் எண்ண ஓட்டத்தை ஒரே வார்த்தையால் கேள்வியாய் தொடுத்தாள் .,
மீண்டும் , நா தழுவ, வார்த்தை வரவில்லை மௌனமாய் சிரிப்பால் உணர்த்தினேன் ,
என் சம்மதத்தை . இருவரிடமும் ஒரு நல்ல உறவு நீண்டது . ஆனால் , சிறிது மெல்லிய
தயக்கம் அவளிடம் தென்பட்டது . நானும் என் வார்த்தையை மிகுந்த
கவனத்துடனேயே பிரயோகப்படுத்தினேன் . நாட்கள் உருண்டன . இருவரும் நல்ல
நண்பர்கள் ஆனோம் ., அவள் அவளின் தோழிகள் அனைவரையும் எனக்கு
அறிமுகப்படுத்தினாள். ஆனால் , நான் என் பெற்றோரை அறிமுகப்படுத்த வேண்டும் .
என்பதிலேயே கவனமாயும் , ஆசையாயும் காத்திருந்தேன் . ஆனால் ,
அவற்றையெல்லாம் ,. நாளை நான் கொடுக்கவிருக்கும் கடிதத்திற்கு அப்புறம் தான்
என்பதிலேயே உறுதியாய் இருந்தேன் .நாளை என்ன நடக்கும் !! என் கடிதத்தை
ஏற்பாளா ??!!! தோழியாய் இருந்தவள் இதற்க்கு சம்மதிப்பாளா !!!????......
இன்று , அவள் என்னை பார்த்தவுடன் வழக்கமான உற்சாகத்துடன் தென்பட்டாள் .
எனக்கு சற்று படபடப்பு மற்றும் கவலைகள் ,பயம் சூழ்ந்து ஒரு முகத்துடனேயே
இருந்தேன் .சிறிது , உரையாடலுக்கு பின் ,, என் கடிதத்தை அவளிடம் நீட்டினேன் .
எரிமலை போல அவளின் முகத்திலிருந்து தீப்பொறி அனலாய் வெளிப்படுவதுபோல
கோபம் கொந்தளித்தன. சாதாரண , வழக்கமான ஒரு ஆண் தோழனை போல நீயும்
நடந்து கொள்கிறாய் என்றாள் .
''இல்லை , இல்லை நான் முழுவதுமாய் உன் தோழன் இல்லை'' . நீதான் என்னை அப்படி
உருவகப்படித்திருக்கிறாய் .
மீண்டும் , வார்த்தைகளால் சுட்டெரிக்க எத்தனித்தபோது நிறுத்து, முதலில் இந்த
கடிதத்தை படி , பின்பு உன் பதிலை பொறுமையாய் , நிதானமாய் கூறு என்றேன் .
மறுத்தால் , என் உறவை வெறுத்து ஒதுக்கியது போல உணர்ந்தேன் .
பல போராட்டத்திற்கு பிறகு , முடிவாக என் கடிதத்தை படிக்கச் சம்மதித்தாள் .
கடிதம் கொடுத்த தருணம் என் தேவதை எங்கள் வீட்டிற்கு வரும் தருணம் வெகு
அருகில் இல்லை . றெக்கை கட்டி பறப்பது போல இருந்தது . உலகில் வேறெதுவும்
இல்லை , வேறெதுவும் தேவை இல்லை இவளின் ''சம்மதம் '' என்ற ஒரு வார்த்தை
போதும் . இந்த ஜென்மம் தித்துல்யம் அடைந்தது என்று மீண்டும் ஏகப்பட்ட
கற்பனைகள் நொடிப்பொழுதில் ஓடி மறைந்தது .
கடிதத்தை படித்தால் , ''அண்ணா '' !!!! ''அண்ணா ''!!!!! என அழுதாள் .
நன் தவறாக நினைத்துவிட்டேன் . அதாவது, நா தழுவ ,,, பெண்கள் நெருங்கி
பழகினால் உடனே , ஆண்கள் ''காதல்'' என்று அர்த்தம் கொள்வார்கள் என்று தான்
நினைத்தேன் இதுவரையில் , ஆனால் ,,,
ஆண்கள் நெருங்கி சகஜமாய் பழகினால் ''காதல் '' என்று பெண்களும் அர்த்தம்
கொள்வார்கள் என்று புரிந்துகொண்டேன் . இரண்டும் தவறு .அன்பு எல்லை
கடந்தது .. பாசம் கொண்டுவந்தது . இருவேறு மனங்களின் பரிமாறுதல் காதலில்
மட்டுமல்ல , அன்பு கலந்த உறவுகளில் (அண்ணன், தங்கை ) உறவுகளில் கூட மலரும் .
நான் எழுதிய கடிதம் ,
என் ராணியம்மா என் மன சிம்மாசனத்தில் நீ என்றுமே ராணி... ஆமாம் ,
நீ என் தங்கை ''raராணியம்மா. உன்னை முதன்முதலில் பேருந்து நிலையத்தில் வெகு
தொலைவில் தான் பார்த்தேன் .என் தங்கை என் தங்கையை பார்த்தது போல் ..
அதே முகம் , அதே நிறம் , அதே வயதையும் ஒத்து நீ இருந்தாய் .இல்லை இல்லை
என் மனதில் நின்றாய் என் தங்கையாய் ராணியை போல வலம் வந்தாய் . பல
வருடங்களுக்கு முன் , இயற்கையின் கோரப்பசியான சுனாமிக்கு என் தங்கையும்
இரையானாள் . அவளின் முகம் இனி எங்கு காண்போம் , அவளின் பேச்சை எப்படி
கேட்போம் என்ற பலநாள் , பல வருட கனவை நீதான் நீக்கினாய் . என் தங்கையை
மீண்டும் கிடைத்ததாய் உணர்ந்தேன் .
என்னை உன் அண்ணனாய் ஏற்பாயா ''அண்ணா ''!!! ''அண்ணா ''!!! என்று
அழைப்பாயா என் தங்கையின் பிறந்த தினமான இன்று பிறந்தநாள் பரிசாய்
கேட்கிறேன் . அவளின் மறு உருவாய் உள்ள ''ராணியம்மா '' விடம் இந்த ''ராணியம்மா ''
-விடம் ....
இப்படிக்கு ,
றெக்கை விரித்தான்
(அன்பாய்அரவணைக்க )
சுவாதி