top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Subbu Kumar - India

Entry No: 

187

தமிழ் கதை (Tamil Kadhai)

காதல் என்பது...!?

அம்மா..அம்மா.... என்று கத்திக் கொண்டே வந்தாள் வித்யா. அம்மா உன்ன எத்தன தடவ கூப்பிடுதேன் காது கேக்கலயா?
ம்ம்ம்...வாடி உனக்கும் உன் அப்பாக்கும் நான் வேலைக்காரி பாரு. கூட்டதும் என்னனு ஓடி வரதுக்கு.
சாரிம்மா ஏன் கோவிச்சுகிர. ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் உன்ன கூப்பிடேன்.
சரி அதான் வந்துடியே சொல்லு என்னனு.
அம்மா என் ஃபிரண்ட் ராகினிக்கு அடுத்த வாரம் கல்யாணம் என்ன நாளைக்கே வரச் சொல்லி இருக்காம்மா.
ம்மா அப்படி முறைச்சிப் பாக்காதம்மா..
பிளீஸ்மா நீதான் அப்பாட்ட சொல்லி பர்மிஷன் வாங்கி தரனும்.
என்னால முடியாது அந்த மனுஷன் ட போய் யாரு பேசுவா
சும்மா சொல்லாதம்மா நீ என்ன சொன்னாலும் அப்பா கேப்பாங்க.பிளீஸ்...ம்மா
சரி காரியம் ஆகனும்னா நீ என்ன வேணாபண்ணுவ.
முதல்ல அந்த துணிய மாடில போய் காய போட்டுடு வா.
இதான்  சாக்குனு நல்ல வேலைவாங்குவா கமலாம்மா...
                                 பகுதி2
          ஏங்க ...
ம்ம்.. இன்னைக்கு    என்ன      தூது விட்டுருக்கா உன் பொண்ணு.
அது      ஒன்னும்.  இல்ல அப்படியா. ஒன்னும் இல்லையா அப்ப சரி போஎனக்கு    ரொம்ப வேலை   இருக்கு என்னை தொந்தரவு பண்ணாதே.
என்னங்க.    நம்ம   பொண்ணு ஃபிரண்டு தெரியும்ல   உங்களுக்கு. ராகினி   அவளுக்கு   அடுத்த வாரம் கல்யாணமாம்.   அதனால நம்ம பொண்ண. நாளைக்கு அவங்க வீட்டுக்கு வரச் சொல்லி  இருக்காலாம் போய் ஒரு வாரம் தங்கிவிட்டு வரட்டுமே
இவளும், அவளும் சின்ன பிள்ளைகள் இருந்தே பிரிண்ட்.  ராகினிக்கு நம்ம பொண்ண விட்டா வேற யார் இருக்கா போயிட்டு வரட்டுமா?
சரிங்க மேடம் நான் வேண்டாம்னு சொன்னா நீங்க சும்மா விட போறீங்க சரி பாத்து பத்திரமா போயிட்டு வரச் சொல்லு.

திவ்யா....
இதோ வாரேன்ம்மா
என்ன  சொன்னாங்க அப்பா. அப்பா போக கூடாதுனு தான் சொன்னாங்க நான் தான் கஷ்டப்பட்டு அப்பாவ சம்மதிக்க வச்சிருக்கேன்.
நீ பாத்து  பத்திரமா போய்டு வா.
போனதும் வீட்ட மறந்துடாம போன் பண்ணு.
சரிங்க மகாராணி தங்கள் உத்தரவு.
இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே பேசு.
அடுத்து உனக்கு தான் கல்யாணம்.

கல்யாணமா எனக்கா..நோ வே...
சொல்லி விட்டு திவ்யா அலுவலகம் கிளம்பினாள்.

அவள் அம்மா அவளைப் பார்த்து பெருமூச்சி விட்டாள். இவளுக்கு இனியா பிறக்க போறான்.எங்க இருக்கானோ.

அவள் போகும் கல்யாண மண்டபத்தில் தான் இருப்பான் என்று பாவம் அவள் அம்மாவுக்கு தெரியாது.   காதல் என்பது ❤️
பாகம் 2
ராகினி தன் தோழியின் வருகைக்காக இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தாள்.
ஊ ஊ ஊ ஊளையிட்டுக் கொண்டு இரயில் வந்து நின்றது.
வேக வேகமாக திவ்யா தன் பெட்டியை எடுத்துக் கொண்டு ராகினியைப் பார்த்ததும் கையினை அசைத்துக் கொண்டே கீழே இறங்கினாள்.

அதே நேரத்தில் திவ்யா பின்னாடி ஒரு இளைஞன் ஓடி வந்தான். வந்த வேகத்தில் அவள் கையினைப் பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் அவன் தலையில் முட்டினாள்.

முன் பின் தெரியாத ஒருத்தன் அவள் கையை பிடித்த கோவத்தில் அவன் முகத்தைக் கூட பார்க்காமல் ஓங்கி ஒரு அறை விட்டாள்.
அங்கு என்ன நடக்கிறது என்று ராகினி சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

அந்த இளைஞன் கண் சிவக்கும் கோவத்துடன் அவளிடம் ஒன்றும் பேசாமல் அவள் கையில் வைத்திருந்த பெட்டியினை பிடுங்கி, தன் கையில் உள்ள பெட்டியைக் கொடுத்து விட்டு அவளைத் திரும்பிப் பார்க்காமல் சென்றான்.
அப்போது தான் திவ்யா தன் தவறை உணர்ந்தாள்.பெட்டியை மாற்றி தூக்கி வந்து விட்டோம் என்று.

ராகினி அவள் அருகில் வந்து என்ன திவ்யா வந்ததுமே பிரச்சனையா

ஆமாடி தப்பு என் மேல தான். பாவம் அவனை அடிச்சிடேன். சாரி கேக்கலாம்னு சொல்லுறதுக்குள்ள அவன் போய்டான் டி

சரி விடு. வா அப்பா நமக்காக கார்ல வெயிட் பண்றார். திவ்யாவும், ராகினியும் அவள் வீட்டிற்கு சென்றனர்.

ராகினி ஊரு கிராமம் தான். ஆனாலும் அவள் வீட்டில் எல்லா வசதிகளும் அவள் அப்பா செய்து வைத்திருந்தார்.
திவ்யாவிற்கு ராகினியின் வீடு மிகவும் பிடித்துவிட்டது.
ராகினி திவ்யா வை அழைத்துக் கொண்டு மாடியில் இருக்குற ரூம்க்கு போனாள்.

என்னடி மாடிக்குக் கூட்டிடு போற.கீழ தான உன் ரூம் இருக்கு.
ராகினி வெட்கத்துடன் ஆமாடி .ஆனால் நானும் அவரும் நைட் போன்ல பேசிட்டு இருப்போம். உனக்கு தொந்தரவா இருக்கும்ல அதான்.
அதுசரி. நான் எப்ப தனி ரூம்ல படுத்துருக்கேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
பிளீஸ்டி எனக்காக என கெஞ்சினாள்.
மனம் இல்லாமல் சம்மதித்தாள்.

ராகினி சந்தோஷமா அவ ரூம்க்கு போனாள்.

ஊரில் இருந்து வந்த களைப்பில் நன்கு குளித்துட்டு கொஞ்சம் தூங்கலாம்னு படுத்தவள் நன்றாக தூங்கி விட்டாள்.

தூக்கத்தில் யாரோ அவள் ரூம் கதவை தட்டுகிற சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள்.
அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்

இது கனவா என்று தன் கையினைக் கிள்ளிக் கொண்டாள்.
வலித்தது. ஆ என்று அவனைப் பார்த்தாள்.

அவன் அவளை சிறிதும் மதிக்காமல் தள்ளிவிட்டு பெட்டில் போய் விழுந்தான்.
அவளுக்கு கோவம் கோவமாக வந்தது.

மிஸ்டர் யார் நீங்க .என் ரூம்ல வந்து படுக்குறீங்க.
கொஞ்டம் கூட அறிவு இல்ல.
ஒழுங்கா வெளிய போ. இல்லனா கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன் என்றாள்.
அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூங்குபவன் போல நடித்தான்.
திவ்யா கோவத்தோட கீழே இறங்கி ராகினியின் ரூம் கதவைத் தட்டினாள்.

ராகினி என்னாச்சி திவ்யா ஏன் இவ்வளவு கோவமா இருக்க.

அந்த பையன் என் ரூம்ல வந்து படுத்துருக்கான் டி
யாருடி
அதான் இரயில்வே ஸ்டேஷன் ல ஒருத்தன அடிச்சேனே அவனை தான்.
கனவு எதும் கண்டியா திவ்யா
இல்லடி உண்மையாகத் தான்.
ராகினி திவ்யா கூட சேர்ந்து மாடிக்கு போனாள்.
அங்கே அவள் ரூம் திறந்து இருந்தது.
அவள் சொன்ன மாதிரி அங்கு யாரும் இல்ல.
ராகினிக்கு கோவமா வந்தது.
தூக்கத்துல கனவு கண்டுடு ஏண்டி
இப்படி படுத்துற
திவ்யா ரூம் முழுவதும் அலசினாள்.
அவன் வந்து போனதுக்கான ஒரு தடயம் கூட இல்ல.
கனவு தான் கண்டோமோ.
இல்ல இல்ல நிஜமாவே அவன் வந்தான்.
ராகினி அவளை சமாதானம் படுத்து சாப்பிட அழைத்துச் சென்றாள்.
திவ்யா திரும்பி அவள் ரூமை பார்த்துவிட்டு சென்றாள்.
                                 ❤️ 3

ராகினியின் அப்பா, அம்மா அவள் அண்ணன் சாப்பாடு மேசையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
திவ்யாவை பார்த்ததும் ராகினியின் அண்ணன் விக்கி ஹை திவ்யா எப்ப வந்த.. எப்படி வந்த . சொன்னா நான் வந்து கூப்பிட வந்துருப்பேன்ல.

திவ்யா ஹை விக்கி புரோ.நான் காலைலயே வந்துட்டேன். கொஞ்சம் தூங்கிட்டேன்.
விக்கியின் முகம் மாறி என்ன புரோவா
நோ நோ கால் மீ விக்கி
உடனே ராகினி மெல்லிய குரலில் வழியாத அண்ணா அப்பா உன்ன தான் பார்த்துட்டு இருக்காங்க.
திவ்யா சிரித்துக் கொண்டே ஓகே விக்கி என்றாள்.
விக்கிக்கு மனதில் ஆனந்தம் தாண்டவமாடியது. ஆனால் திவ்யாவின் மனமோ அந்த பையனை தேடியது.
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.இருவரும் இணைவார்களா?



bottom of page