top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Srisivashankari Manickavasagam - India

Entry No: 

284

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு

அன்பின் *சுவாசம்*.....
அவணியில் தோன்றியதற்கான அர்த்தங்கள்.......

கருவாகி உருவற்ற நிலையில் -அன்னையின் காதல்......
உருவாய் பிறக்கையில் உள்ளம் கொள்ளை கொள்ளும் தந்தையின் பாசம்.....

வம்சத்தின் விருட்சமாய் கொண்டாடும் தாத்தா.....
சொல்லும் கதை அனைத்திலும் இளவரசு பட்டம் சூட்டும் பாட்டி.........

தாய் வேறில்லை தாய் மாமன் வேறில்லை என்னும் மாமன்.....
மாற்றான் வீட்டு பிள்ளையாய் பாவிக்காத அத்தை.....

இலக்கு மட்டுமே முக்கியம் என்று செல்ல அறிவுரைகளோடு சித்தப்பா
அன்னையின் மறுஉருவில் சித்தி......

வீழ்ந்தாலும் வல்லமையோடு வலிமை தரும் அண்ணன்......
சண்டைகள் வந்தாலும் அன்பின் ஆழம் குறையாத தம்பி தங்கை......

அன்பும் அதட்டாலும் நிறைந்த போதனை தரும் ஆசான்......
பந்தம் பல இருந்தாலும் நான் உன் சொந்தமடா என்னும் தோழமை........

துயரிலும் சொர்க்கம் தரும்
வாழ்க்கை துணை......
மார்பு அணைந்து விரல் பிடித்து உறங்கும் தவப்புதல்வர்கள்.......

அன்பின் உருக்கள் ஆயிரம் வழியில்.....
அகிலம் ஆள அன்பொன்றே வழி.......

By
Srisivashankari manickavasagam

bottom of page