REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Sowparnika Sowmi - India
Entry No:
275
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதலின் ஆசை அலைகள்:
இத்தனை ஆண்கள் இருந்தும் நான் ஏன் உன்னை பார்க்க வேண்டும்
உன் ஒற்றைப் பார்வை என்னை ஏன் இவ்வளவு ஈர்க்க வேண்டும்
நீ பேசும் ஒருசில வார்த்தைகளுக்காக நான் ஏன் ஏங்க வேண்டும்
நீ எனக்காக ஒதுக்கும் சில நிமிடங்களுக்காக நான் ஏன் காத்திருக்கவேண்டும்
இதற்கான காரணம் என்ன என்பதை அறிய நான் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டவேண்டும்
இப்படி பல கேள்விகள் மனதிற்குள் எள
காத்திருக்கிறேன்..!!
உன் விழிகள் என் விழிகளை காண
காத்திருக்கிறேன்..!!
என் அத்தனை மணி துளிகளையும் உன்னுடன் களிக்க
காத்திருக்கிறேன்..!!
உன் விரல்களை பிடிக்க
இத்தனை தருணங்களும் உன்னிடம் சொல்லாமல் அந்த சொல்லில் வாழ்ந்து கொண்டு பலகோடி ஆசைகளையே உருவாக்கியுள்ளேன்
சாலையில் இருவரும் கைகோர்த்து நடக்க சாலை முடியுமோ..!?
நான் உன்னுடன் இருக்கும் சில நிமிடங்கள் நகராமல் இருக்குமோ..!?
நாம் இருவரும் சந்திக்கும் அத்தனை தருணங்களும் நினைவில் இருக்குமோ..!?
இருவருக்கும் இடையில் உள்ள இந்த நெருக்கம் குறையக்கூடுமோ..!?அல்லது அதிகரிக்குமோ..!?
இருமடங்காக அதிகரித்து
நீ தூங்கிய பிறகு நான் தூங்காமல்
உன் முகம் பார்த்து ரசிக்கும்
இந்த காட்சி கனவோ, நிஜமோ என்று தெரியாமல்
இன்று வரை ரசித்துக் கொண்டிருக்க
உன் காதல் வாசம் எல்லாம் என் தேகம் மணம் வீச
என்னுடைய காயங்களை எல்லாம் நீ ஆற்ற வருவாய் தலைக்கோதி என்னை தேற்ற வருவாய் என்று
காதல் துளிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.