top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SOLAI RAJA S - India

Entry No: 

488

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்


உயிரை வருடும் காதல் ஓவியம்

உலகை இயக்கும் அழியாக் காவியம்

கனவை விதைத்து கவிதை அரும்பும்

கானம் பாடத் தினமும் விரும்பும் ...


இளைய நெஞ்சில் ராகம் மீட்டும்

இதயம் புகுந்து மோகம் கூட்டும்

கண்ணில் விழிகள் காமம் தேடும்

கனிந்த முத்தம் கேட்டு ஓடும் ...



மகரந்தம் தேடி நித்தம் பூக்கும்

மனதில் நுழைந்து உறவைக் கேட்கும்

இரவு பகல் கனவாய்ப் போகும்

இதயம் மட்டும் நினைவில் சாகும்...



உதட்டு மஞ்சம் கேட்டுத் துடிக்கும்

உறவில் கலந்து பொய்யாய் நடிக்கும்

அன்பைச் சுமந்து அதரங்கள் வீங்கும்

அழகுக் காதலைப் பார்க்க ஏங்கும் ...



இடியும் மின்னலும் உணர்வில் சுரக்கும்

இதழில் மோகம் இதமாய்க் கறக்கும்

வீடும் உறவும் மறக்கச் சொல்லும்

விழிகளில் தோற்று விரகம் வெல்லும் ...



உண்ண மறந்து வயிறு நிரம்பும்

உறவை நினைத்து புடைக்கும் நரம்பும்

முகத்தின் அழகு நித்தம் சிறக்கும்

முகவரி தேடி இமைகள் பறக்கும் ...


உறவை வளர்க்கும் அமுத ஊற்று

உள்ளம் இணைக்கும் இதய நாற்று

ஆண் பெண் அடிப்படைச் சொந்தம்

அகிலம் உயிர்க்க காதலே பந்தம் ...

bottom of page