top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sivarajasingam Nirmala - Switzerland

Entry No: 

255

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

முத்தமிழைக் கற்போம் முனைந்து
+++++++++++++++++++++++++++++++++++
செந்தமிழைக் கற்பதால் சிந்தையில் நல்லெண்ணம்
வந்தமர உள்ளம் மகிழுமன்றோ - அந்தமிழைக்
கொஞ்சிடும் சொற்களைக் கூறும் இனிமையில்
நெஞ்சமும் வாழ்த்தும் நிமிர்ந்து


முத்தமிழும் சேர்ந்திருக்கும் முத்தான செம்மொழியை
எத்திக்கும் போற்றுவார் என்றென்றும் - தித்திக்கும்
இன்தமிழைக் கேட்போர்கள் எல்லோரும் வாய்திறந்தே
இன்பமொழி என்பார் இனிது


சந்தங்கள் கொஞ்சும் தனித்தமிழ்ப் பாக்களும்
விந்தைகள் காட்டும் வியப்புறவே - எந்தமிழைச்
செந்தமிழ் என்றே சிறப்பாகச் சொல்லிடச்
சிந்தை மகிழும் சிறந்து


பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

bottom of page