REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sivamani Natarajan - United Arab Emirates

Entry No: 

449

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


கவிதை: கட்டழகான கண்ணம்மா

நெல்லுக் கட்டு சுமந்து போகும்
கட்டழகான கண்ணம்மா
நித்தம் நித்தம் கொல்லுதே
உன் கண்ணம்மா

வளைஞ்சி நெளிஞ்சி நடக்கையிலே
மின்னும் பொன்னம்மா
வாரி சுருட்டிய புல்லாட்டம்
கட்டி செல்லும் பொன்னம்மா

உருட்டு விழி பார்வையிலே
கொத்தி சென்ற செல்லம்மா
நான் பார்க்கும் போதாவது
பார்த்து விடு செல்லமா

சோழியாட்டம் சிரிக்கையிலே
கரைஞ்சு போறேன் வெல்லம்மா
போட்டி போட்டு போடும் தாவணியில்
அடித்து போற வெள்ளமா

கை அசைத்து பேசயிலே
மாத்தி போனா கல்லாட்டம்
குறுக்கு சந்தில் ஓடி ஓடி
பார்த்திட செய்யுறேன் கள்ளாட்டம்

பரிசம் போட்டு பந்தம் சொல்லி
நான் தாரேன் தங்கமா
தலை ஆட்டி சரி சொல்லிடு
நான் வாரேன் சொந்தமான்னு

சிவமணி