REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Shruthishree S - India
Entry No:
416
தமிழ் கதை (Tamil Kadhai)
அன்பின் பரிமாணம்
பல வண்ண பட்டாம்பூச்சி 🦋 கொள் சிறகடித்துப் சுற்றி வரும் தனது மகளின் வீட்டு தோட்டத்தில் தன் கணவருடன் அமர்ந்திருந்தாள் நம் கதாநாயகி பவித்ரா.கணவரின் காலில் ஓர் அறுவை சிகிச்சை காரணமாக அவள் அங்கு வந்திருந்தாள்.சில வாரங்கள் கழித்து தற்சமயம் அவர் கைத்தாங்கலாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
பத்ரி,"பவித்ரா வந்த வேலை முடிந்து விட்டது கிளம்பி வேண்டியது தானே?"என்றார் அவளைப் பார்த்து
ம்ம் கிளம்ப வேண்டியது தான் பவித்ரா பதிலளிக்க
இருவரும் மெதுவாக எழுந்து உள்ளே சென்றனர்.மாலை இருவரும் கிளம்பி வாசல் வரை வந்தவரின் காதில் கலகலப்பாக பேசும் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.. அந்த குரல் மாப்பிள்ளை பரத் குரல்
தன் கல்லூரி நாட்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை கட்டுரையாக்கிக் கொண்டிருந்தார் அவளிடம்.இதில்தான் தன்னிடம் எத்தனை பெண்கள் வட்டமிட்டதாக ஜம்பம் பேசிக்கொண்டு இருந்தார்.
பவித்ரா மனதில் பழைய நினைவுகள்
11ம் வயதில் ஆறாம் வகுப்பு படிக்கிற போது ஹரி என்ற வகுப்பு தோழனை நினைவு கூர்ந்தார்.எத்தனை காலங்கள் ஆனால் என்ன! அவனது குறும்புடன் கூடிய கள்ள மில்லா அன்பு பார்வவை மனதை விட்டு அகலவில்லை.
இது ஒரு வித மழலை அன்பு(காதல்) உணர்வு என்று சொல்லலாம்.
ரகு, தான் தட்டச்சு பயின்ற போது தன்னை குறுகுறுத்த பார்வை.
இது எத்தகைய அன்பா காதலா?
இப்படியே பலகோணங்களில் அன்பு பாராட்டி பழகியவர் பலர்.
தன் வாழ்நாளில் ஏற்பட்ட தடம் மாறுதல்களை நினைத்து பார்த்தாள்.வாதநோயால் தந்தையை இழந்தாள். சமூகத்தின் வார்த்தை களில் இருந்து விடுபட திருமணம்.
ஆம் இன்று கைத்தாங்கலாக அழைத்து சென்ற இன்ஜினியர் பத்ரியை மணந்தாள்.பின் அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து சுக துக்கங்களை ஏற்றுக் கொண்டாள்.புகுந்த வீட்டில் உள்ளவர்கள் அவள் மீது சொலுத்தியது உறவவுக்காதல்(அன்பு).
வாழ்க்கை என்ற நீண்ட கோடு கட்டங்களாக மாறி பின் வட்டங்கள் ஆகிறது.