REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Shruthi shree Seshadri - India
Entry No:
414
தமிழ் கதை (Tamil Kadhai)
கண்ணனின் காதல்
🙏கோகுலத்து கிணற்றடி🙏
கோபிகைகள் ஒன்று சேரும் இடம்.அவரவர்கள் தங்கள் குடங்களை கொண்டு வந்து தண்ணீர் நிரப்பி எடுத்து செல்வது வழக்கம்.கொஞ்ச நேரம் தோழிகளுடன் பேசுவது வழக்கம்..... அப்படியே கொஞ்ச நேரம் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்கவும்.....அதை கேட்க வரும் மான் மயில்கள் வண்ணத்துபூச்சிகள் வட்டமிடும் அழகை காணவும் ....அமர்ந்து இருப்பார்கள் .....கண்ணன் கோகுலத்திற்கு வந்தது முதல் ஒருத்தருக்கு
ஒருத்தர் கண்ணனின் லீலைகளை பற்றிய பேச்சுக்கள் தினமும் அடிபடும்.அவன் செய்யும் விஷமத்தனமான லீலைகளையும் பேசுவது அதுவே அவர்களின் பாகவதம்.
ஒரு கோபிகை சொல்லுவாள் இன்று என் வீட்டு பானையை உடைத்து வெண்ணெய் களவாடினான் என்று மற்றொருத்தி என் வீட்டு கன்றுகுட்டியை அவிழ்த்து விட்டு பசுமாட்டின் பால் அனைத்தும் குடிக்க செய்து விட்டான் என்று கூறிக்கொண்டே குடத்தை சுமந்து செல்வார்கள். சமயத்தில் பானை உடைந்து விடும் அப்போதும் பழியை கண்ணன் மேலே போட்டு விடுவார்கள்.ஒரு கோபிகை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க கயிறு கொண்டு வந்தாள் கயிறு அங்காங்கே முடிச்சு போட்டு இருக்கு ஒரு கோபிகை ஏண்டி நேற்று தானே புதுசு வாங்கினே அதற்குள் எப்படி இவ்வளவு அறுந்து போச்சு என்கிறாள். அதற்கு இந்த கோபிகை சொல்கிறாள் வேறு ஒன்றும் இல்லை இந்த கயிற்றை நானே வேண்டும் என்று அறுத்து முடிச்சு போட்டு இருக்கேன்.யசோதை கண்ணனை கட்டி போட்டதை ஞாபக படுத்திக்க என்கிறாள்.
வேறு ஒரு கோபிகை தண்ணீர் நிறைந்த குடத்தில் லேசாக உடைத்து ஓட்டை போடுகிறாள் ஏண்டி இப்படி செய்கிறாய் என்று கேட்க அவள் நான் தலையில் வைத்து கொண்டு வளைந்து வளைந்துசெல்வேன் ஜலம் தரையில் சிந்தி பாம்பு போல் நெளிந்து நெளிந்து வரும் அதை பார்த்து கொண்டே கண்ணன் என் பின்னால் வருவான் என்கிறாள்.
மற்றோருத்தி அங்கே கண்ணன் வருவதை பார்த்து கயிற்றை இழுக்க முடியாதது போல் ஐயோ ரொம்ப கனக் கிறது இழுக்க முடியாவில்லை கண்ணா சீக்கிரம் வா என்பாள் கண்ணன் அவளை ஆரதழுவிய படியே கயிற்றை இழுத்து குடத்தை மேல் கொண்டு வருவான். கண்ணன் எல்லோரும் குடத்தில் தண்ணீர் நிறப்பும் வரை இருப்பான் உடனே அம்மா என்ற படியே நைசாக கிளம்புவான்.கோபிகள் கண்ணா குடங்களை எடுத்து தலையில் வைடா என்பார்கள்.கண்ணன் நான் மாட்டேன் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று கூறிய படியே ஓடி விடுவான்.கோபிகள் தலையில் இரண்டு மூன்று குடங்களை தலையில் வைத்த படி தாங்கள் தங்கள் வீட்டுக்கு வரும்போது கண்ணன் தயாராக இருப்பான் இரு இரு நானே எல்லோர் தலையில் இருக்கும் குடங்களை இறக்கி வைக்கிறேன் என்பான்.கோபிகைகள் போடா அங்கே தலையில் வைக்க முடியாது என்று சொல்லி விட்டு இங்கே வந்து இறக்கி வைக்கிறேன் என்று சொல்கிறாயே என்கிறாள் குடத்தை உடைத்து விட்டு விடுவதற்கு தானே என்கிறாள்.கண்ணன் அப்படி செய்ய மாட்டேன்.எனக்கு பாரத்தை இறக்கி விட தான் தெரியும்.என்று கூறிய படியே குடங்களை இறக்கி விட்டு வெண்ணெய் தரேன் என்றாயே எங்கே என்று கேட்ட படியே இதோ வருகிறேன் என்ற படியே மாயமாகி விடுவான். மேலும் காதல் வார்த்தைகள் பேசி ஒரு முறை இரு முறை பல முறை காதல் காதல் வந்ததம்மா என்று சொல்லி உன்னை பார்த்து ....பெண்ணே
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும் பெண்ணே
உன்னிடம் நான் பேசினால்
உன் வாசம் இன்று என் வாசல் வந்து நம் சுவாசம் ஆனதே என்று சொல்லி கோபிகையை மயக்கி வெண்ணை களவாடி மனதையும் களவாடி. இன்னொரு கோபிகை வீட்டுக்கு செல்வான்....இதுவும் காதல் தான் ஆனால் தெய்வீக காதல்..இதை புரிந்து கொள்ள கண்ணனிடம் பக்தி வேண்டும் ...