REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SENTHILKUMAR R - India
Entry No:
437
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு....
அன்பே உலகின் ஆதாரம்
அதுவின்றேல் உயிருக்கு சேதாரம்
வாழ்க்கையில் வசந்தம் வந்திடும்
வளமான வாழ்வு ஈந்திடும்..
உலக உயிர்களை இணைத்திடும்
உயர்ந்த பண்பினை தந்திடும்
உறவுகள் வளரச் செய்திடும்
பிரிவுகள் மாண்டிடச் செய்திடும்..
அன்பெனும் பிடியுள் அகப்படும்
அகமே நிறைக்க வந்திடும்
இன்னல் போக்கி இதந்தரும்
கண்ணில் கருணை பெருகிடும்...
மண்ணில் மகத்துவம் ஓங்கிடும்
மலரும் பூமியைத் தந்திடும்
வன்முறை குலையச் செய்திடும்
வான்புகழ் பெருமை தந்திடும்...
பகமை அழிக்க வழி தரும்
பார்புகழ் போற்றச் செய்திடும்
இனிய வாழ்க்கை நிரந்தரம்
இதற்கு நீ தான் காரணம்..
புனித மனிதனை உருவாக்கும்
புதிய பூமியை விரிவாக்கும்
மனித நேயம் மலர்ந்திட
மகத்தாய் துணிவைத் தந்திடும்..
இனிய வாழ்க்கை புலர்ந்திட
இன்பம் என்றும் நிலைத்திட
வாழ்க்கையில் வசந்தம் பெருகிட
வன்மை உணர்வுகள் போக்கிட..
தின்மை தினம் தினம்தந்திடும்
பொல்லா ஆணவம் ஒழிந்திடும்
புதுமை உலகைப் படைத்திடும்
கருணை மிகுவாய்ப் பெருகிடும்
இறக்கம் வெகுவாய் தொடர்ந்திடும் ..
இனிதாய்நல்லறம் பெருகிடும்..
நாளைய பொழுதும் மலர்ந்திடும்
நலம்தரும் வாழ்க்கை நவின்றிடும்.
ஏற்றத் தாழ்வுகள் நீங்கிடும்
எளிமை வாழ்வு வந்திடும்
துளியும் வஞ்சனை பெருகாது
துன்பம் துளியும் நெருங்காது...
நிலையாமை வாழ்வில் நீங்கிடும்
பொறாமை வாழ்வில் போக்கிடும்
அமைதி வாழ்வை தந்திடும்
அகமே நிறைவாய்த் தங்கிடும்