top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Senthil Anand - United Kingdom

Entry No: 

114

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பட்டாம்பூச்சிகள்.. சிவப்பு, நீலம், ஆரஞ்சு,
ஓடி, தேடி, விரட்டி.. கைகளுக்குள் ஒன்றும் இல்லை..
அவள் ஒற்றைப் பார்வையால்,
வயிற்றுக்குள் ஓராயிரம்!


போதைப் பொருள் அடிமை நான்..
'கஞ்சாவா, ஹெராயினா??'
நீ...


யாரைப் பார்த்தாலும் உன்னைப் போலவே தோன்றுகிறது,
நீயாகவே இருந்து விடேன்!


எந்த கண்ணாடியைக் கடந்தாலும், நின்று, உன் முகம் பார்க்கிறாய்..
உன் அழகைக் காண, உனக்கே அவ்வளவு ஆசை இருக்கும் போது,
நான் எப்படி உன்னைப் பார்க்காமல்....?


நீ ஒன்றும் அழகு சிலை இல்லை,
உன்னைப் பார்க்கும் போது எல்லாம்
சிலை ஆகிப் போவது நான் தான்!


காற்றில் மேல் காதல் கொண்டு
அசைந்தாடும் ஒற்றைமுடியை தூக்கி நிறுத்துகிறாள் அவள்...
அடங்கி போகத்தான் செய்கிறது சிறிது நேரம்,
அவள் விரல் தீண்டிய மயக்கத்தில்...


'என்னால்தான் கவிதை எழுத மாட்றியா, ஏன்??' என்கிறாய் கண்கள் விரிய..
என்ன செய்ய.. முன்பொரு நாள், உனக்கு பரிசளித்தக் கவிதையாய்த் தான் இல்லாததில்,
என்னைப் புறக்கணிக்கின்றன எல்லா கவிதைகளும்!


விடியல் காணா ஊடல்,
காரணம் அறியாக் காதல்...
மண வாழ்வின் ஆச்சரியங்கள்!


இணையின் காதல் ஆழ்கடல்...
ஆழி சூழ் உலகு, நம் வாழ்க்கை!


அவ்வப்போது அன்பளிப்பதிலும்,
எப்போதும் அன்பை அளிப்பதிலும்,
வாழ்ந்திடும் இல்வாழ்க்கை நீடூழி..


சொந்தம் கொண்டாடுவதை விட்டு,
சொந்தங்களைக் கொண்டாடுவதில் இருக்கிறது,
திருமணத்தின் ஆயுள் ரேகை!


சண்டையிட்ட மனம்...
கல்லடி பட்ட கண்ணாடி!
ஒன்றை நூறாக்கும்..


கோபம் கொண்ட மனைவி-
சுடுகின்ற நெருப்பு!
உடனே அணைத்திடல் நலம்..


விட்டுக்கொடு...
கெட்டுப்படும், இல்லற உறவு!

கணவன் மனைவி சண்டையில் தோல்வியே,
மணவாழ்க்கையில் வெற்றிக்கான முதற்..இல்லையில்லை..ஒரே படி!


ஒரே நேரத்தில்
இருவரும் கோபப் படுத்தல் தவிர்த்தலும்,
முப்பொழுதும் நினைவு பாராடலும்,
இல்வாழ்க்கையின் அரிச்சுவடி..

bottom of page