REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Senthamizh Selvan ck - India

Entry No: 

389

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அவளின் கால்கொலுசு அவள் உடைகளுக்கு பொருந்திடும்
அலங்காரம், அவள்கால் சுற்றி
எனை இறுக்கிய ஓர் இசை.

அவள்கால் செருப்பு பற்றாது என அறிந்தும் திருட்டுத்தனமாய் என்கால் அணிந்தமுதல் செருப்பு.
அவள்கால் விரல்கள் பலநாள் நான் மண்பார்க்கக் காரணம்.

அவளின் கால்கள் தரையிறங்கிய முகில்குளிர்.

அவள்பாதம் மீதுவிழ அல்ல மிதிபட தென்றலை எதிர்த்து கிளைபிரியும் செம்பூக்கள்.
- செந்தமிழ்