top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Senthaamarai Selvi G - India

Entry No: 

423

தமிழ் கதை (Tamil Kadhai)

அன்பு

முன்னுரை:

"அம்மா என்றால் அன்பு
அன்பு என்றால் அம்மா"

"அன்பே தெய்வம்"

அளவிடமுடியாத, யாராலும் அழிக்க முடியாத அன்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்

விளக்கவுரை:

"அன்பே சிவம்"

இவ்வுலகில் ஆக்கலும் அழித்தலும் நடத்தும் சிவபெருமானை அன்பிற்கு ஒப்பிட்டது மிகையாகாது. அன்பைப் பற்றி பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் தன்னுடைய பொதுமறை நூலாம் திருக்குறளில் அன்புடைமை என்னும் தலைப்பில் பத்து குறள்கள் கொடுத்துள்ளார். அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம்

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்விலர்
புண்கணீர் பூசல் தரும்."

அன்பை அடைக்க தாழ்ப்பாள் இல்லை என்ற கருத்தை இக்குறள் உணர்த்துகிறது

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"

அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கையே உரியது என்பர். அன்புடையவரோ தமது உடம்பையும் பிறருக்கு உரியமையாக்கி வாழ்வர்

அன்பு என்ற பண்பினால் தான் அன்னை தெரசா உலகில் உள்ள அனைவருக்கும் தெய்வமாக திகழ்கிறார்.

ஒருவரின் வாழ்க்கை அழகாக அமைய அன்பு அவசியம்.

அன்புள்ளம் கொண்டவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் அக்குடும்பம் ஆரயோக்கியமான குடும்பமாக திகழும்

ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்களும் சகோதரிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அதற்க்கு அன்பு என்ற குணம் தேவைப்படுகிறது

அத்தகைய அன்பை பணத்தை கொடுத்து வாங்கமுடியாது

"அன்பை அன்பினால் மட்டுமே வாங்க முடியும்"

முடிவுரை:

இவ்வுலகில் நாம் அனைவரும் அன்புள்ளம் கொண்டவர்களாக வாழ்வோம்

"வாழ்க அன்பு"
"வளர்க அன்பு"

bottom of page