REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Selvagandhimathi P - India
Entry No:
43
தமிழ் கதை (Tamil Kadhai)
முடிவில்லா காதல்…
சோம்பல் முறித்து மெல்ல சூரியன்
எழ,புல்லின் மேலுள்ள பனித்துளி சூரியனின்
பார்வையில் உருகவா மேகத்தின்
அணைப்பில் உறங்கவா என்ற குழப்பத்தில்
தள்ளாடி நிற்க பறவைகள் ஒன்றுக்கொன்று
வணக்கங்கள் பரிமாறி இரை தேட கிளம்பும்
வேலையில் ஜோஷுவா நடைப்பயிற்சி
முடித்து தோட்டத்தினருகே வரும் பொழுதே
யானி யானிமா...
வரேன் வந்துட்டு இருக்கேன் ..
ஊர்ல எல்லாருக்கும் ஹெல்த் அட்வைஸ் குடுக்க வேண்டியது ஆனா இந்த காபீ பழக்கத்தை மட்டும் மாத்திக்காதீங்க.
பெண்ணே உன் அழகிய கரங்களால் காபீ குடிக்க நானும் உன்னை மலரென்று நினைத்த வண்ணத்து பூச்சியும் உன் வரவுக்காக காத்திருக்கிறோம்.
இருப்பீங்க இருப்பீங்க.
காபீ குடிக்கறதை கம்மி பண்ண சொன்னா வசனம் பேசிகிட்டு..
அழகிய வதனம் கொண்டவளே இது வசனம் இல்லையடி கவிதை.
ம்ம்ம்கூம்.
யானி… யானிமா…
அந்த மேஜைல தான் வச்சுருக்கேன்.தெரிஞ்ச நியூசை மாத்தி மாத்தி படிக்க என்ன தான் இருக்கோ அந்த நியூஸ் பேப்பர்ல ..
புலராத காலை நீ ...
என்ன டிபன் யானிமா..
கல் தோசையும் பூண்டு சட்னியும்.
அழகான சுந்தரியே உன் சுவாசத்தை விட இட்லியின் வாசம் பெரிதல்ல.
இன்னிக்கு இட்லி இல்ல தோசை.
யானிமா யானிமா.!
உன் அழகிய திருக்கரங்களால் ஸ்டராங்கா சூடா ஒரு காபீ.
தரேன் உடனே வசனம் பேசிறாதீங்க.
லஞ்சுக்கு சாம்பாரும் பீன்ஸ் உசுலி யானி தங்கம் ...
பண்ணிட்டா போச்சு..
ஜோஷு சாப்பிட வாரீங்களா சூடு ஆரிட்ட அதுக்கொரு வசனம் ஆரம்பிப்பீங்க.
வரேன் வரேன்..
அசைவ பிரியனை சைவமாய் மாற்றிய சொப்பன சுந்தரியே !!
இலைல நெய் ஊத்தி சாம்பார் பருப்புனு சாப்பிடற சுகமே சுகம்.சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னே வரும் பாரு ஒரு தூக்கம் அடடா!! சொர்க்கம்… சொர்க்கம்….
குட்டி தூக்கம் முடிஞ்சு எழும்பும் பொழுதே யானிமா!!
எடுத்து வரேன் காப்பிய..மாலை நேரமாச்சு ஒரு டீ குடிக்கலாம்ல.கேக்றதே இல்ல..
நிலவு ஒரு பெண்ணாகி..
போதும் நம்ம பாப்பு குட்டிக்கு கால் பண்ணுங்க.
குமரி நீ சொல்லி கேக்காம இருப்பேனா…
ஹலோ!
ஹலோ!
அப்பா டேப்லெட் போட்டிங்களா?
போட்டாச்சு மா அம்மைக்கும் கொடுத்தாச்சு.
கண்டிப்பா இந்த வீக் செக்கப் பண்ண வரேன்மா உன் கிளினிக்கிற்கு.
ஐ தாத்தா! தாத்தா!
அப்பா இவ கிட்ட குடுக்கிறேன்.
இந்த தாத்தாட்ட பேசு.
தாத்தா …
சொல்லு குட்டிமா எப்படி இருக்க? அக்கா என்ன பன்னிட்டு இருக்காள்? இன்னிக்கு கிளாஸ் எப்படி போச்சு?
அது இருக்கட்டும் தாத்தா.இன்னிக்கு யானி பாட்டிகூட எத்தனை சண்டை ஹி ஹி ஹி.
இன்னிக்கு 3 தான் ..
ஹா ஹா ஹா..
நா இல்ல உன் பாட்டி தான் ஆரம்பிச்சது.
யாழினி னு எங்கப்பா வச்ச அழகான பேர்ல ‘ழ’ வராம யானி யானி ண்ட்டு கேட்டா செல்லமா னு சொல்றது. இதுல நா தான் சண்டையை ஆரம்பிச்சேன்னு பேச்சு வேற..
ம்ம்க்கும்..
பாட்டி பேசுறது கேக்க குட்டிமா.
ஹி ஹி.
இப்படியாக இந்த பாட்டி தாத்தாவின் முடிவில்லாத காதல் கதை 20 இல் ஆரம்பித்து காலம் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது...
Entry No:
42
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
நிலவின் வேண்டுதல்
வானத்தை போல பரந்த நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்து
எரி நட்சத்திரத்தை போல உள்ள புருவங்களுக்கிடையில் சிக்கி
மின்னல் ஒளியை போல உள்ள இரு விழிகளின் பார்வையில் கிறங்கி
வால் நட்சத்திரம் போன்ற மூக்கின் ஸ்வாசிப்பில் மயங்கி
புவி ஈர்ப்பு விசையை போல இழுக்கும் இடியை போன்ற உன் வார்த்தைகளில் மனதை பறிகொடுத்து
வானவில்லை குழைத்து செய்த உன் அழகிய முகத்தை நாள்தோறும் பார்த்து பித்து பிடிக்க தேயாத வரம் ஒன்று இறைவனை வேண்டுகிறேன்.
தன்னவனை தினம் தினம் கனவில் பார்த்து ரசிப்பதற்காகவே இரவு நீண்டிட கலையாத கனவொன்றை இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
மனம் கவர்ந்த கள்வனை தேடி தேடி தேய்ந்து தேய்ந்து பிரகாசிக்கும் நிலவின் தேடல் தன் அழகிய காதலனை தேடி ........