top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sathishkumar Venkatesan - India

Entry No: 

545

தமிழ் கதை (Tamil Kadhai)

இரட்டையர்கள்

ஆதிகாடு என்னும் இடத்தில் ஓர் மகிழ்ச்சியான குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்திற்கு குழந்தை இல்லை.குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் மனைவி குழந்தை இல்லை என்று வருந்துவதை நினைத்து கணவர் மிகவும் கவலையாக இருந்தார். அவர் தன் மனைவியிடம் "ஏன் வஞ்சிக்கப்பட்ட குழந்தையை தத்து எடுக்கக்கூடாது?" பிறகு நம் குடும்பமும் முழுமைபெற்று மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறினார். அதற்கு மறுநாள் அவர்கள் யோசனை போல ஆண் குழந்தையை தத்து எடுத்தார்கள்.அந்த குழந்தையின் பெயர் "அஸ்வின்". ஒரு வருடம் கழித்து அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தையின் பெயர் "ஆகாஷ்". 6 வருடம் சென்றதும் அவர்கள் இரட்டையர்கள் போலவே தோற்றம் அளித்தனர்.அவர்களது பெற்றோர்கள் ஆச்சரியப்பட்டனர்.

ஆண்டுகளுக்குப் பிறகு

பல வருடம் கழித்து அவர்கள் கல்லூரிக்கு போகும் காலம் வந்தது.அப்பொழுது ஒரு அழகான பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்தனர். அந்த பெண்ணால் இவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் இருந்து அவர்களது பெற்றோர்கள் விடுபட வைத்தார்கள். இருந்தாலும் ஆகாஷ்கு கோபம் இருந்து கொண்டே இருந்தது அஸ்வினை பழி வாங்கத் துடித்தான். ஒருமுறை ஒத்தையடி பாதையில் மிதி வண்டி பந்தயம் வைத்து வரும் போது எதிரே வரும் வாகனத்தை பார்க்காமல் இருவரும் கீழே விழுந்தனர்.அந்த விபத்தில் அஸ்வினுக்கு கை கால் உடைந்தது , ஆகாஷுக்கு தலையில் அடிபட்டு மூளை செயலிழந்து விட்டது.எதிர்பாராமல் வாகனத்துக்கு பின்னால் ஒரு செய்தியாளர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த விபத்தை கண்டதும் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தனது ஊடகத்தின் மூலம் அவர்களது பெற்றோருக்கு செய்தி தெரிவித்தார். அதைக்கேட்ட அவர்களது பெற்றோர்கள் பதறி அடித்து அந்த மருத்துவமனைக்கு வந்தனர். அப்பொழுது அந்த மருத்துவர் உங்களது மகன்களுள் ஒருவனுக்கு மூளை செயலிழந்து விட்டது, மற்றொருவன் தனது கைகளை இழந்துவிட்டான். அதை கேட்ட தாயார் மிக சோர்வு அடைந்து விட்டாள். தந்தை அவளை சமாதானப்படுத்தினார்.இதில் யாராவது ஒருவனை மட்டுமே காப்பாற்ற முடியும்.இதில் மூளை செயல் இழந்தவனை காப்பாற்றுவதே சரியான தீர்வு என்று நான் எண்ணுகிறேன் டாக்டர் கூறினார். அதற்கு அவர்களும் அதுவே சரியான தீர்வு என்று எண்ணினார்கள். மூளையை மாற்றும் சிகிச்சையும் நன்றாக நடந்து முடிந்தது. அவன் குணமாகி வீட்டுக்கு திரும்பி விட்டான். அவனுடைய அப்பா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு கதை புத்தகத்தை வாங்கினார். அவனுடைய நடவடிக்கைகள் மற்றும் குணங்கள் எல்லாம் அஸ்வின் அது செயல் போல மாறியது.இதைக் கண்ட பெற்றோர்கள் மருத்துவரிடம் சென்று விசாரித்தனர்.அப்பொழுது மருத்துவர் அனைத்தையும் விளக்கமாக கூறினார். அவனின் தந்தை வாங்கின புத்தகத்தை படிக்க தொடங்கினார். அந்த புத்தகத்தின் பெயர் "இரட்டையர்கள்"... அதை படிக்க படிக்க தனது வாழ்க்கையில் நடந்தது போலவே உணர்ந்தார்.அதில் ஊர் பெயர், மகன்களின் பெயர், தனது பெயர், தனது இரண்டு மனைவியின் பெயர், மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது என்று அவருக்கு தெரியவந்தது.அந்த பெயர்களை மட்டும் மாற்றி அமைத்தார். அவர் மனைவி அவரிடம் "நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?"என்று வினாவினார். ஆகாஷின் கல்லூரி காட்சிகள், ஆகாஷ் கல்லூரிக்கு சென்றான். அந்தப் பெண்ணைப் பார்த்து பேசினான். அந்தப் பெண் அவனிடம் பேசாமல் போனால். அப்போது ஆகாஷ் நான் அஸ்வின் என்றான். அந்தப் பெண் " நீ என்ன பைத்தியமா?"என்று கேட்டாள்.அதற்கு ஆகாஷ் அந்தப் பெண்ணிடம் தெளிவாக கூறினான்.அஸ்வின் கல்லூரி முடித்து வீட்டிற்கு திரும்பினான்.அவன் தந்தை வெளியே சென்றுவிட்டார்.வெளியே சென்ற விட்ட மறுகணம் அவன் தந்தை வாங்கிய அந்த புத்தகத்தை எடுத்து படிக்க விரித்தான். அதில் அவருக்கு இரண்டு மனைவிகள் என்று தெரியவந்தது. இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் முதல் மனைவியான அப்பெண்ணுக்கு மற்ற ஒருவருக்கும் தவறான தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் பேசிக் கொண்ட காரணத்தினால்.அந்த பெண்ணை கத்தியால் பத்துமுறை குத்திக் கொண்டான்.அவள் துடித்து துடித்து இருந்தாள்.அதுபோலவே முதல் பையனான அஸ்வினை கொன்றுவிட்டு ஆகாஷை வைத்து கொள்ள சொன்னவனும் அவனே ஆவான்.ஆகாஷை அஷ்வின் மீது காழ்ப்புணர்ச்சியை தூண்டியவரும் அவரே ஆவார். இதை படித்த அவள் ஆக்ரோஷமாக வெளியே சென்று விட்டாள்.இதை ஓரமாய்நின்றுகேட்டுக் கொண்டிருந்த ஆகாஷ் அறைக்குள் சென்றான். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவனின் அப்பா அந்த புத்தகத்தைப் படித்தார்.அந்த புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் புத்தகத்தை படித்த அதே நிமிடம் அவர் இறந்துவிடுவார் என்று எழுதியிருந்தது.

அதுவும் நிஜமாக நடந்துவிட்டது.....

அவரை கொன்றது யார் தெரியுமா ? அவரை கொன்றது முதல் பையன் .ஏனெனில் முதல் பையனின் மூளையை வைத்து இரண்டாவது பையனுக்கு மாற்றி அமைத்து உள்ளது.

bottom of page