REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Saraswathi R - India
Entry No:
26
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவிதை
மனிதனே!.....
* உன்னுள் மறைந்ததோ
அன்பு......
பணம் எனும் குழியில்
உன் அன்பை வைத்து
புதைத்தாயோ?
* மாய உலகில்
போலி வாழ்க்கை
வாழ்ந்து உன்னையே - நீ
ஏமாற்றுகிறாயோ?.......
* அன்பு என்ற ஒன்றை
பாடமாக படித்து
கற்றுக் கொள்ளும்
இளைய சமூகமே!!!......
உன் பெற்றோரிடம் கேள்
அன்பு என்றால் என்ன??
* அலைபேசி யிடம் உன்
நேரத்தைக் கொட்டாதே!
அன்னையிடம் காட்டு....
உன்னை உலகிற்கு
காட்டியவள்.....
*அன்பால் இயங்கிய
அண்டத்தை இதோ
நான் காட்டுகிறேன்.......
அன்பும் கடவுளும் ஒன்றே....
தேடினால்
கிடைக்காது ஏனெனில் - அது
உன்னுள் இருப்பது....
உணர்ந்தால் மட்டுமே புரிவது....
புரிதல் ஒன்றே அன்பு - ஆம்
அது புனிதமானது....
பணம் கொடுத்தும்
வாங்க முடியாது.....
கொடுத்தாலும் குறையாதது.....
*சிறிய புன் சிரிப்பு போதும்
அன்பைக் காட்ட
பகட்டான வாழ்க்கை தேவையில்லை.....
* நட்பிற்கு இலக்கணமாக
நின்றவர்கள் ஏராளம்
அன்பைக் கொடுத்து
பண்பில் நின்றவர் தாராளம்....
* விட்டுக் கொடுத்தவர்
கெட்டுப் போனதில்லை
அன்பைக் தந்தவர்
தரணியில் தாழ்ந்த தில்லை...
அன்பிற்கு ஆண் - பெண்
பேதம் இல்லை.
* ஆணின் அன்பு -
அதட்டுவதில் தெரியும்
அது - அகந்தை அல்ல
அன்பென்று.....
* பெண் - கருவறை யிலிருந்து
கல்லறை வரை
அன்பை ஆயுதமாக
வைத்தால் - வாழ்க்கை
வசந்த மாகும்......
* உறவினர் - வருகை யிலும்
வரவேற்பதில்
அன்பைக் கொட்டினால்
சொந்தமே சொர்க்க மாகும்....
* எதிரியையும் நேசி...
என்றும் நீ உயர்ந்தவனே!.....
அறிவில் சிறந்தவன்
அண்டத்தை ஆளாகிறான்....
சிறந்த அன்பில் நிறைந்தவர்
காலம் கடந்தும் வாழ்கிறார்....
* தருமம் வெல்ல போராட
ஆயுதம் வேண்டாமே....
* உண்மையும் அன்பும்
உன்னைச் சேர்க்கும்
வெற்றிப் பாதைக்கு......
* நேசிக்கக் கற்றுக் கொள்!...
காலம் மீண்டும் வரப்போவதில்லை........