top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Saran B - India

Entry No: 

141

தமிழ் கதை (Tamil Kadhai)

வயது முதிர்ந்த மனிதர் ஒருவர் தன் விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்துக்கொண்டு யிருந்தார். அந்த முதியவரின் பெயர் சரவணன் அவருக்கு வயது 70 இருக்கும் இவர் தன் வாழ்நாளில் அடைய வேண்டியவற்றை அடைந்தும் இருக்கலாம் அடையமலும் இருக்கலாம். தான் நினைத்த படிப்பு, தன் நினைத்தது போலவே ராணுவத்தில் வேலை என்று வாழ்வு மகிழ்ச்சியாக தான் கழிகிறது அவருக்கு இருந்தும் ஒரு குறை அவர் மனதை வாட்டுகிறது அந்த நீண்ட நாள் குறையை பற்றி இந்த கதை.

முதியவர் வயலில் விவசாயம் செய்துக்கொண்டு யிருந்தார் அப்போது அவரின் வீட்டிற்கு அவருடைய பேரன் நீலன் வந்திருப்பதாக பணியாள் சொன்னான். உடனே முதியவர் மகிழ்ச்சியுடன் சென்றார்‌ ஏன் என்றால் பேரன் நீலன் மீது அவருக்கு அவ்வாளவு பிரியம் பள்ளி விடுமுறை நாட்கள் வந்தவுடன் இங்கு வந்து விடுவான் நீலன். உயர்கல்வி சென்றதால் 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இங்கு வந்திருக்கிறான்.

வீட்டின் உள்ளே சென்று தாத்தா நீலனை பார்த்தார் சின்னஞ்சிறு சிறுவனாக இருந்தவன் இளைஞனாக இருப்பதை கண்டு மகிழ்ந்தார்.

நீலனுக்கும் தாத்தா மீது பிரியம் அதிகம்.

இருவரும் சந்தித்துக் நீண்ட நாள் ஆனதால் அவர்கள் பேச நிறைய விசயங்கள் இருந்தது. பேச்சிலேயே நாள் கழிந்தது.

இரவு ஆனாதால் தாத்தா படுக்கை அறைக்கு சென்று படுத்தார். நீலனும் உறங்க சென்றான். ஆனால் அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன் என்றால் அவன் இங்கு வந்ததற்கு காரணம்? நீலன் தன் பட்டப்படிப்பை முடித்த பின் வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று ஆசை அதற்காக தாத்தாவிடம் பணம் கேட்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளான். ஆனால் எப்படி கேட்பது என்று தெரியவில்லை.

சரி காலை கேட்கலாம் இது பற்றி என்று நினைத்து உறங்க தொடங்கினேன்.

தீடீரென்று வீட்டு பணியாள் ஒருவன் வந்து நீலனை அவசரமாக எழுப்பினான்.

தம்பி எந்திரிங்க ஐயாவுக்கு உடம்பு சரியில்லை என்றான்.

நீலன் எழுந்து சென்று தாத்தாவை பார்த்தான் அங்கு அவர் உடல்நிலை மோசமாகி இருந்தது. உடனே நீலன் தாத்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள்.

இந்த செய்தி அறிந்த நீலனின் அப்பா விரைவாக மருத்துவமனைக்கு வந்தார்.
என்ன நடந்தது என்று நீலனிடம் விசாரித்தார்.
அப்போது மருத்துவர் நீலனிடமும் அவனுடைய அப்பாவிடமும் தாத்தாவின் உடல்நிலை பற்றி கூறினார்.

நீங்கள் தானே நோயாளியின் உறவினர்கள்? என்றார் மருத்துவர்.

நாங்க தான் டாக்டர் தாத்தாவிற்கு உடல்நிலை எப்படி இருக்கு என்றான் நீலன்.

மன்னித்து விடுங்கள் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது பிழைப்பது மிகவும் கடினம் ஆனால் எதற்க்கவோ அவர் உள்ளம் ஏங்குகிறது என்றார் மருத்துவர்.

இதை கேட்ட நீலன் மிக வருத்தமும் கோபமும் கொண்டான்.

ஏன் பா எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கனுமா நா தாத்தா கிட்ட உதவி கேட்க்கும் போது தான் அவருக்கு இப்படி அகனுமா என்று ஆத்திர பட்டான்.

இதை கேட்ட நீலனின் அப்பா.

ஏன் டா தாத்தா பிழைப்பாரனே தெரியல ஆன உனக்கு உன் வேல தான் முக்கியம். அதானே சொந்த தாத்தாவா இருந்தா பாசம் வரும் இவரு தாத்தா வோட அண்ணன் தானே எப்படி பாசம் வரும்.

டேய் ஆன‌ அவரு அப்படி என்னையும் பாக்கல உன்னையும் பக்கல அவரோட சொந்த பேரன் மாதிரி தான் பார்த்தாரு‌ உன்ன.

அவர் இருக்கிற வீடு, விவசாய நிலம் எல்லாம் உன் பேர்ல எழுதி வச்சியிருக்கிறாரு ஆன நீ போடா என்றார் கோவமாக.

இதை கேட்ட நீலன் அனலிடை இட்ட மெழுகு போல வேதனை பட்டன் தான் செய்த செயலை எண்ணி.

நீலன் அவ்விடத்தவிட்டு தாத்தாவின் வீட்டுக்கு சென்றான்.

தான் செயலை எண்ணி வருந்தினான் அவருடைய அறைக்கு சென்றான். அங்கு ஒரு டைரி இருந்தது அது தாத்தாவின் டைரி அதில் தாத்தா தன் வாழ்வில் நடந்த மற்றும் கடந்து வந்த பாதையையும் பற்றியும் அனுபவம் பற்றியும் எழுதியிருந்தார் அவர் இளம் வயதில் கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை காதல் செய்ததாகவும் அவளிடம் தன் காதலை சொல்ல தயங்கி ஒர் கடிதத்தில் எழுதினார் ஆனால் அதை அவர் கடைசி வரை தரவே இல்லை. கல்லூரியும் முடிந்தது அந்த பெண்ணுக்கும் திருமணமாகி விட்டது. ஆனால் அவரால் அந்த பெண்ணை மறக்கவும் முடியவில்லை ஆதனால் அவர் திருமணமும் செய்துக்கொள்ளவில்லை ஆனால் இது எதுவும் அந்த பெண்ணுக்கு தெரியாது.

இந்த டைரியை படித்த நீலனுக்கு வருந்தம் கலந்த மகிழ்ச்சி. எப்படியாவது அந்த பெண்ணை கண்டுபிடித்து இந்த விசயத்தை கூறி கடிதத்தை குடுத்து தாத்தாவை சந்திக்க வைக்கவேண்டும் இது தான் செய்த தவறுக்கு பிறாச்சித்தம் என்று எண்ணினான்.

அது போலவே தாத்தாவின் காதலியை சந்தித்து நடந்ததை கூறி கடிதத்தை அவரிடம் தந்தான் நீலன். அதை அவர் படித்தார் தாத்தாவை பார்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இதற்குள் தாத்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி யிருந்தது. அப்போது அவரின் காதலி அங்கு வந்தார்.

bottom of page