REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Santhosh Ramanathan - India
Entry No:
235
தமிழ் கதை (Tamil Kadhai)
ஒரு நாள் வண்ணமீன்கள் விற்பனை ஆகின்ற இடத்தில் அந்த மீன்கள் பேசிக்கொண்டு இருந்தன. அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த ஒரு பொடியன் ஆசையாய் ஒரு மீனை வாங்கிச் சென்றான். அதனை ஒரு சிறிய தொட்டியில் இட்டு பாசமாக
வளர்த்து வந்தான். ஆனால் அந்த மீனோ தனது பழைய முதலாளி தன்னை ஏமாற்றிவிட்டதாய் கருதிக்கொண்டிருந்தது. ஆனால், சில காலங்களில் சிறுவனின் மீது அந்த மீனிற்கும் அன்பு ஏற்பட்டது. தினமும் அவன் அந்த மீனிடம் சில மணி நேரம் கதைப்பான். அந்த மீனால் வாய் பேச இயலவில்லை என்றாலும் அழகாய் கவனிப்பது போல் பாவனை செய்யும். ஆனால் இந்த அழகிய தினங்கள் மிகுந்த நாள் நீடிக்கவில்லை. அந்த சிறுவன் இப்பொழுதல்லாம் சரியாக அதனைக் கவளிப்பதே இல்லை. பின்னர், அவன் அந்த குட்டி மீன் இப்பொழுது வளர்ந்து விட்டது. எனவே அதனை ஆற்றில் விட்டுவிடுவோம், என எண்ணினான். அந்த மீனிடமும் அதைக் கூறினான். அதனால் அந்த மீன் மிகவும் கவலை உற்றது. பின்னர், என்ன செய்ய முடியும். இதனால் வாய்தான் பேச முடியாதே. இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு சோகமாக பெருமூச்சு விட்டது.பின்னர், அந்த நாள் வந்தது. அவன் மீனை சந்தோஷமாக எடுத்துச் சென்று ஒரு குளத்தில் விட்டு விட்டான். ஆனால் இவ்வளவு நாளாக அவனையே உலகமாக எண்ணி வாழ்ந்த அந்த மீன் சில கணங்களில் திக்குத் திசை தெரியாமல் திணறியது. வேறு சில மீன்களை அந்த குளத்தில் கண்ட போதிலும் அறற்கு நிம்மதி கிடைக்கவில்லை. நிச்சயம் ஒரு நாள் அவன் என்னை வந்து கூட்டிச்செல்வான் என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தது. சில மாதங்களில் வறட்சி காலம் ஏற்பட்டு குளம் மிகச்சிறிய குட்டையாக மாறி சில மாதங்களில் அந்த குளம் வறண்டு விட்டது. இதனால் அந்த மீன் மிகவும் வருந்தியது. ஆனால் அந்த வறட்சியே தன்னை மீண்டும் மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தப் போகின்றது என்று உணரவில்லை.
அந்த சிறுவன் அக்குளத்தின் நிலையைக் கேட்டு ஒடி வந்து அந்த மீனினை அழைத்துச்சென்றான். மீண்டும் தனது வீட்டிற்கே வந்து சேர்ந்தது. பிறகு அந்த மீனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
கருத்து : நீங்கள் தரும் சிறிய அன்பும்
பிறருக்கு உலகமாய் தோன்றும்.
அன்பைப் பகிர்!!