REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SAIRENU SHANKAR - India
Entry No:
356
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
நிபந்தனையற்ற நேசம்!
==================
நிபந்தனையில்லா நேசத்தில்
நித்தம் நெஞ்சம் களிக்கிறது
தபித்த லில்லை களித்தல் மட்டும்
தளிர்விட்டேதான் வளர்கிறது
தாண்டிக் குதிக்கும் தடைகள்கூட
தங்கும் நிழலாய்த் தெரிகிறது
வேண்டா தெதையும் விடியும் நாட்கள்
விளையாட்டாக நகர்கிறது
தவறும் சரியும் பொருட்டாகாது
தன்னியல் பாகத் தெரிகிறது
அவச்சொல் ஏதும் கேட்டா லதனை
அவரவர் புகழ்ச்சொல் மறைக்கிறது
உன்னில் நானும் என்னில் நீயும்
உள்ளதோர் உலகம் விரிகிறது
கண்கள் மூட இரவொடு, திறக்கக்
காலை இனிதாய் விடிகிறது
வானும் கோளும் நட்சத்திரமும்
வாழ்ந்திடும் நம்முள் ஒளிர்கிறது
நானும் நீயும் கொண்டதாம் அரிய
நேசம் ஒளியாய் மிளிர்கிறது!
தந்தையும் தாயும் நேசம் மிகுந்து
தாங்கிட உயிர்கள் வளர்கிறது
சிந்தை நிறைக்கும் உறவின் நட்பின்
சீர்மிகு நேசம் மிளிர்கிறது
தேனினும் இனியது தர்மம் அதனால்
தாரணி எல்லாம் இனிக்கிறது
நானிலம் தழுவிய ஞானம் விளைக்கும்
நேசம் இறையாய் அருள்கிறது!
Entry No:
354
English Poetry
LOVE POTION
Here I have come to recite
An ancient renowned recipe,
It is so good and potent too
For now and times to be.
There are a lot of love potions
Scattered in and around,
But none so difficult and good
As well, I'll be bound.
So difficult it is to brew,
Attempted by a precious few,
It takes the need of people two,
Both tested, tricky and true.
Take a cauldron as large as Life,
Ignite the firewood of Ego,
And now begin, Man and Wife,
To mix the ingredients, just so.
Little Understanding, a measure of Care,
Mix them in the bowl of Day,
Brittle they are, handle with care,
Now add some joy, add some play.
Now pour on it the Oil O' Love,
And mix it into a batter,
Pour it good, more the better,
And mix it well, mix it now.
Don't let the clusters form,
They're called Misunderstanding,
If you could beat them, then no harm,
It makes the batter outstanding.
Pour the batter into the Cauldron,
Cook it until it's done,
Ready in no time if batter is good,
May take but years for some.
It might turn Green with envy,
And Red with Anger, Blue if cold
But if you add an occasional smile,
That makes it better, all told.
And when the Cauldron boil and simmer,
When the potion shine and shimmer,
That’s when love begins to glimmer,
Drink it up, and begin Life's Summer.
This is the potion for Everlasting Love,
Brewed by lovebirds then and now,
For two hearts who want to be together,
And keep caring for ever and ever.