top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sabarishri Kowsalya - India

Entry No: 

338

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

1. வகுப்பறை உள்ளே/
கூச்சலுடன் பெருஞ்சண்டை/
ஆசிரியர் வந்ததும்/
அமைதியாகினர் மாணவர்கள்/

2. அடம்பிடித்து அழுது/
ஆர்ப்பாட்டம் செய்தவள்/
அம்மாவின் கொஞ்சும்/
அரவணைப்பில் அமைதியானாள்/

3. ஓடியாடும் குழந்தைகள்/
ஓரிடத்தில் இருக்கிறார்கள்/
அலைபேசியைப் பார்த்தபடி/
ஆன்லைன் வகுப்பில்/

4. மலர்வனம் எங்கும்/
மகிழ்வுடன் சுற்றி வருகிறாள்/
நடைபயிலும் வண்டியுடன்/
மலரோடு மலராக யென்மகள்/

5. துன்பங்களின் வடுக்கள்/
துளியும் இன்றி துரத்திடும்/
பால்மணம் மாறா/
பச்சிளங் குழந்தையின் குறும்புகள்/

6. குறைவில்லா செல்வம் பல/
இருந்தும் ஏக்கம் கொள்கிறாள்/
ஏழைச் சிறுமியின் குறும்பைக்/
கண்ட குழந்தையில்லா பெண்/

7. இறைவன் படைப்பில் இன்றும்/
இயல்பு மாறாமல் இருப்பது/
இளம்பிஞ்சின் மழலை மொழியும்/
அழகிய குறுஞ்சிரிப்பும் மட்டுமே/

8. சாத்தியமில்லா ஒன்றையும்/
சாத்தியப்பட வைத்திடும்/
கற்பனையில் கதை சொல்லும்/
குழந்தையின் கதாபாத்திரங்கள்/

9. அதிகாலைச் சூரியன்/
அந்திமாலை அஸ்தமிக்கும்/
அஸ்தமிப்பின்றி தொடர்வது/
குழந்தையின் மழலை மொழி/

10. கொட்டும் மழையில்/
முற்றத்தில் விட்ட காகிதக்கப்பல்/
மூழ்கியதும் பெருக்கெடுத்தது/
குழந்தையின் கண்களில்/

ரே.ஸ்.சபரிஸ்ரீ கௌசல்யா,
6ம் வகுப்பு (வயது 11),
நா.சு.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
பட்டிவீரன்பட்டி - 624 211

bottom of page